அல்லிசன் ஹூக்கர்
புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் (அரசியல் விவகாரம்) அல்லிசன் ஹூக்கர் டிசம்பர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை இந்தியாவில் பயணம் செய்ய உள்ளார்.
இந்தியா வரும் ஹூக்கர், மத்திய அரசின் உயர் அதிகாரி களை இன்று சந்தித்துப் பேச உள்ளார். அப்போது, இருதரப்பு உறவை மேம்படுத்துவது, பொருளாதார ஒத்துழைப்பு, அமெரிக்க பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இதையடுத்து, பெங்களூரு செல்லும் ஹூக்கர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்குச் சென்று உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அப்போது, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.இதனிடையே, எல்லை தாண்டிய தீவிரவாதம் உட்பட அனைத்து தீவிரவாத செயலை கண்டிப்பதாக இந்தியாவும் அமெரிக்காவும் நேற்று தெரிவித்தன.