உலகம்

சவுதி அரேபியா, ஹவுதி இடையே போர் தீவிரமடைகிறது: புனித மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு

செய்திப்பிரிவு

ரியாத்: சவுதி அரேபி​யா, ஏமனின் ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே போர் தீவிரமடைந்து வரு​கிறது. புனித மெக்கா நகரை குறி​வைத்து ஹவுதி கிளர்ச்​சிப் படை நேற்று நடத்​திய ட்ரோன் தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​பட்​டது.

ஏமன் நாட்​டில் ஹவுதி கிளர்ச்​சிப் படை, பிஎல்​சி, எஸ்​டிசி ஆகிய 3 குழுக்​கள் தனித்​தனி​யாக ஆட்சி நடத்தி வரு​கின்​றன. இந்த மூன்று குழுக்​களும் பரஸ்​பரம் மோதலில் ஈடு​பட்டு வரு​கின்​றன. இதில் ஹவுதி கிளர்ச்​சிப் படைக்கு ஈரானும், பிஎல்​சி-க்கு சவுதி அரேபி​யா​வும், எஸ்​டிசி-க்கு ஐக்​கிய அரபு அமீரக​மும் ஆதரவு அளித்து வரு​கின்​றன.

கடந்த சில நாட்​களாக சவுதி அரேபி​யா, ஹவுதி கிளர்ச்​சிப் படை இடையே தீவிர போர் நடை​பெற்று வரு​கிறது. ஹவுதி படை​யின் தலைநக​ரான சனா மற்​றும் ஹோடைடா துறை​முகம் மீது சவுதி போர் விமானங்​கள் குண்​டுமழை பொழிந்து வரு​கின்​றன. இதற்​குப் பதிலடி​யாக சவு​தி​யின் ஜெட்​டா, தயூப் நகரங்​கள் மீது ஹவுதி படை ஏவு​கணை​கள், ட்ரோன்​கள் மூலம் அதிதீ​விர தாக்​குதல்​களை நடத்தி வரு​கிறது.

சவுதி அரேபியா எச்​சரிக்கை: முஸ்​லிம்​களின் புனித நகரான மெக்கா வான் பரப்​பில் நேற்று ஹவுதி படை​யின் ட்ரோன் நுழைந்​தது. இந்த ட்ரோன் நடு​வானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​டது. சவுதி அரேபிய ராணுவ செய்​தித் தொடர்​பாளர் துர்கி அல் மாலிகி கூறும்​போது,“கடந்த 2017-ம் ஆண்டு புனித மெக்கா நகரை குறி​வைத்து ஹவுதி தீவிர​வா​தி​கள் ஏவு​கணையை வீசினர். தற்​போது அவர்​கள் ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்த முயற்சி செய்​துள்​ளனர்.

இந்த தாக்​குதல் வெற்​றிகர​மாக முறியடிக்​கப்​பட்​டது. புனித மெக்​காவை குறி​வைத்​ததன் மூலம் சிவப்பு கோட்டை அவர்​கள் தாண்டி உள்​ளனர். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்​கப்​படும்” என்​றார். ஹவுதி செய்​தித்​தொடர்​பாளர் ஹசம் அல் அசாத் கூறும்​போது, “புனித மெக்கா நகரம் மீது நாங்​கள் தாக்​குதல் நடத்​த​வில்​லை. சவுதி அரேபியா பொய் குற்​றச்​சாட்டை சுமத்​துகிறது” என்​றார். சவுதி அரேபிய ராணுவம் புனித மெக்கா நகரில் அபாய எச்​சரிக்கை விடு்த்​துள்​ளது. வான்​வழி தாக்​குதல் அபா​யம் நீடிப்​ப​தால் பொது இடங்​களில் ஒன்​றுகூட வேண்​டாம், மொட்டை மாடிகளில் யாரும் நிற்க வேண்​டாம் என்று சவுதி ராணுவம் எச்​சரித்​துள்​ளது.

ஹவுதி படை​யின் ஏவு​கணை, ட்ரோன் தாக்​குதல்​களில் சவுதி அரேபி​யா​வின் பல எண்​ணெய் கிணறுகள் தீப்​பிடித்து எரி​கின்​றன. சவு​தி​யின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஹவுதி படை நேற்று அறி​வித்​தது. சவுதி அரேபியா மற்​றும் அதன் ஆதரவு பெற்ற ஏமனின் பிஎல்சி படை​யின் தாக்​குதல்​களில் ஹவுதி படை கட்​டுப்​பாட்​டில் உள்ள பகு​தி​களில் இது​வரை 300 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். நூற்​றுக்​கணக்​கானோர் காயமடைந்து உள்​ளனர்.

பாகிஸ்​தான் உதவ மறுப்பு: சவுதி அரேபி​யா, பாகிஸ்​தான், துருக்கி ஆகிய நாடு​கள் கடந்த ஆகஸ்​டில் மெக்கா பாது​காப்பு ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட்​டன. இதன்​படி ஏதாவது ஒரு நாட்​டின் பாது​காப்​புக்கு அச்​சுறுத்​தல் ஏற்​பட்​டால் இதர நாடு​கள் ராணுவ ரீதி​யாக உதவ வேண்​டும். தற்​போது ஹவுதி கிளர்ச்​சிப் படை​யின் தாக்​குதலை சவுதி அரேபியா சந்​தித்து வரு​கிறது. இந்த இக்​கட்​டான நேரத்​தில் சவு​திக்கு ராணுவ ரீதி​யாக உதவ பாகிஸ்​தான்​, துருக்​கி நாடு​கள்​ மறுத்​து​விட்​ட​தாகக்​ கூறப்​படு​கிறது.

SCROLL FOR NEXT