மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் ரஷ்ய ராணுவ உயர் அதிகாரி உயிரிழந்தார்.
ரஷ்ய ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனராக இருப்பவர் லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வாரோவ். இவரது காரில் வைக்கப்பட்ட குண்டு நேற்று வெடித்துச் சிதறியது. இதில் சர்வாரோவ் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சதியில் உக்ரைன் சிறப்புப் படையினர் ஈடுபட்டிருக்கலாம் என ரஷ்ய புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்காவின் புளோரிடா நகரில் ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். ரஷ்யாவும் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை. உக்ரைனின் ஒடேஷா துறைமுகத்தை ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர் 27 பேர் காயம் அடைந்தனர்.