உலகம்

நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும்: கலிபோர்னியா சட்டப்பேரவையில் தீர்மானம்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலி​போர்​னியா மாகாண சட்டப்​பேரவை, 2026-ம் ஆண்டு நவம்​பர் 8-ம் தேதியை “தீ​பாவளி தின​மாக” அதி​காரப்​பூர்​வ​மாக அங்​கீகரித்து தீர்​மானம் நிறைவேற்​றி​யுள்​ளது. சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் தர்​ஷனா படேல் மற்​றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்​தத் தீர்​மானத்தை முன்​மொழிந்​தனர்.

இந்​திய அமெரிக்​கர்​கள் மற்​றும் தெற்​காசி​யச் சமூகத்​தினர் மீது ஆழ்ந்த மரி​யாதை செலுத்​தும் இத்​தீர்​மானம், அன்​றைய தினத்​தில் கலி​போர்​னியா மக்​கள் அனை​வரும் பங்​கேற்று மகிழு​மாறு அழைப்பு விடுக்​கிறது. இந்​துக்​கள், சீக்​கியர்​கள், பவுத்​தர்​கள் மற்​றும் ஜைனர்​களால் கொண்​டாடப்​படும் 'விளக்​கு​களின் வரிசை' என்​றழைக்​கப்​படும் தீபாவளி, இருள் மீது ஒளி​யும், தீமை மீது நன்​மை​யும் வெல்​லும் பண்​டிகை​யாகச் சிறப்​பிக்​கப்​படு​கிறது.

இனிப்​பு​கள், சுவை​யான உணவு மற்​றும் ஒளிமய​மான அலங்​காரங்களின் மகிழ்ச்​சி​யை​யும் தாண்​டி, இத்​தீர்​மானம் தீபாவளியைத் தனி​நபர் மற்​றும் சமூக வளர்ச்​சிக்கு வழி​காட்​டும் ஒரு நிகழ்​வாகவே பாவிக்​கிறது.

“கொண்​டாடு​பவர்​களுக்​குத் தீபாவளி என்​பது அறி​வு, வளர்ச்சி மற்றும் மகிழ்ச்​சிக்​காகத் தங்களை அர்ப்​பணிக்​கும் காலம். இது ஞானம், இரக்​கம் மற்​றும் நேர்​மறை மாற்​றத்​தின் அவசி​யத்​தைச் சிந்​தித்​துப் பார்க்​கும் தருணம்” என்​றும் அத்​தீர்​மானத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT