மாஸ்கோ: ரஷ்யா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிறிஸ்துமஸ் மற்றும் 2026 புத்தாண்டு ஆகியவற்றுக்காக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்களுக்கு அதிபர் புதின் தனது வாழ்த்துகளை கூறியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, காமன்வெல்த் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்துகளை தெரிவித்துள்ள அதே வேளையில் மாஸ்கோவுக்கு எதிரான உக்ரைன் போரில் மறைமுகமாக ஈடுபடும் ஐரோப்பிய நாடுகளை அவர் வாழ்த்துப் பட்டியலில் தவிர்த்து விட்டார்.