வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி

ஏஐ தொழில்நுட்பம் மூலம் பக்தர்கள் கண்காணிப்பு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி
Updated on
1 min read

திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு நேற்று அதி​காலை 12.05 மணிக்கு திரு​மலை​யில் சொர்க்க வாசல் திறக்​கப்​பட்டு பக்​தர்​கள் சுவாமி தரிசனத்​திற்கு அனு​ம​திக்​கப்​பட்​டனர்.

வைகுண்ட ஏகாதசி​யையொட்டி திருமலை ஏழுமலையான் கோயிலில் மூல​வருக்கு புதிய பட்​டாடை உடுத்​தப்​பட்​டது. அதி​காலை ஆண்​டாள் அருளிய திருப்​பாவை பாடப்​பட்​டது. கோயில் முழு​வதும் வண்ண மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்​டிருந்​தது.

ஏழு​மலை​யானை தரிசனம் செய்ய டிசம்​பர் 30,31 மற்​றும் ஜனவரி 1 ஆகிய 3 நாட்​களில் குலுக்​கல் முறை​யில் டிக்​கெட்​டு​கள் பெற்ற பக்​தர்​கள் மட்​டுமே சுவாமி தரிசனம் செய்ய அனு​ம​திக்​கப்​பட்​டனர். டிக்​கெட் இல்​லாத பக்​தர்​கள் ஜன.2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனத்​திற்கு அனு​ம​திப்​போம் என சொல்லி சமா​தானப்​படுத்​தினர்.

நேற்று காலை 9 மணி​யில் இருந்து 10.30 மணி வரை, உற்​சவர்​களான ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாய் மலை​யப்​பர் தங்க ரதத்​தில் உலா வந்து பக்​தர்​களுக்கு அருள் பாலித்​தார். அப்​போது தேரை திரளான பெண் பக்​தர்​கள் வடம் பிடித்து இழுத்​தனர். மாட வீதி​களில் பக்​தர்​கள் திரண்டு சுவாமியை கோவிந்​தா... கோவிந்தா என கோஷமிட்​ட​வாறு வழிபட்​டனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு திரு​மலை​யில் அனைத்து ஆர்​ஜித சேவை​களும் ரத்து செய்​யப்​பட்​டன. முகப்பு கோபுரம், பலிபீடம், கொடிமரம் மற்​றும் உப சன்​ன​தி​கள் என கோயில் முழு​வதும் பழங்​கள் மற்​றும் வண்ண மலர்​களால் ஆலங்​காரம் செய்​யப்​பட்​டிருந்​தது. 10 நாட்​களுக்கு 50 டன் மலர்​கள் 10 டன் பழங்​கள் உபயோகப்​படுத்​தப்​படு​வ​தாக கூறப்​பட்​டுள்​ளது.

ஸ்ரீரங்​கம் ரங்​க​நாதர் கோயிலை போன்ற மாதிரியை ஏழு​மலை​யான் கோயி​லில் தேவஸ்​தான தோட்​டக்​கலை துறை​யினர் ஏற்​பாடு செய்​திருந்​தனர். இது பக்​தர்​களை வெகு​வாக கவர்ந்​தது. இன்று துவாதசியை முன்​னிட்​டு,

திரு​மலை​யில் அதி​காலை 4.30 மணிக்கு சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. இதற்​கான ஏற்​பாடு​களை திருப்​பதி தேவஸ்​தானம் செய்​துள்​ளது.

விஐபிக்​கள் படையெடுப்பு: வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்​டு, திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் விஐபிக்​கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்​தனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, மத்​திய அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு, ஆந்​திர அமைச்​சர்​கள் அச்​சன் நாயுடு, கேஷவ், கொண்​டபல்லி ஸ்ரீநி​வாஸ், கொல்லா ரவீந்​தி​ரா, கிரிக்​கெட் வீரர் சூர்​யகு​மார் யாதவ், திலக் வர்​மா, நடிகர் ரோஹித், நடிகை ஸ்ரீ லீலா, சிவாஜி உட்பட பலர் தங்​களின் குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யானை தரிசித்​தனர். இவர்​கள் அனை​வருக்​கும் தேவஸ்​தான அதி​காரி​கள்​ தரிசன ஏற்​பாடு​களை செய்​து, தீர்த்​த பிர​சாதங்​களை வழங்​கினர்​.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி
அதிபர் புதின் இல்லம் மீது உக்ரைன் தாக்குதல்: பிரதமர் நரேந்திர மோடி கவலை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in