உலகம்

​போர்ட்டோ ரிகோவின் ஜெனிஃபர் பரேட்டோ 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்டம் வென்றார்

செய்திப்பிரிவு

சான் ஜுவான்: போர்ட்டோ ரிகோ​வின் ஜெனிஃபர் பரேட்டோ 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்​டத்தை வென்​றார்.

போர்ட்டோ ரிகோ தலைநகர் சான் ஜுவானில் உள்ள ஜோஸ் மிகு​வல் அக்​ரெலாட் உள்​விளை​யாட்டு அரங்​கத்​தில் நவம்​பர் 24-ம் தேதி இரவு 75-வது மிஸ் யுனிவர்ஸ் இறு​திப் போட்டி நடை​பெற்​றது. இதில் போர்ட்டோ ரிகோ​வின் ஜெனிஃபர் பரேட்டோ பட்​டம் வென்​றார். தற்​போதைய மிஸ் யுனிவர்​ஸான மெக்​சிகோ​வின் பாத்​திமா போஷ், ஜெனிஃபர் பரேட்​டோவுக்கு மகுடம் சூட்​டி​னார்​.

டொமினிகன் குடியரசின் மெலிசா நுனேஸ் இரண்​டாம் இடத்​தை​யும், வெனிசுலா​வின் கிளாரா வேகா கோயட்ஸ் மூன்​றாம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

இறு​திப் போட்​டி​யில் பிலிப்​பைன்​ஸ், நியூசிலாந்​து, வெனிசுலா, டொமினிகன் குடியரசு, போர்ட்டோ ரிகோ ஆகிய 5 நாடு​களின் போட்​டி​யாளர்​கள் தேர்​வாகினர். இவர்​களிடம் “தற்​போதைய சூழலில் உலகுக்கு தனது தலை​வர்​களிட​மிருந்து மிக அதி​க​மாக தேவைப்​படு​வது என்​ன?” என்ற கேள்வி கேட்​கப்​பட்​டது.

இக்கேள்விக்கு ஜெனிஃபர் பரேட்டோ அளித்த பதிலே அவரது வெற்​றியை உறுதி செய்​தது. “தொழில்​முறை அடிப்​படையி​லான பரிவு கொண்ட தலை​வர்​களே உலகுக்​குத் தேவை. நாம் வாழும் உலகில் பிறரை அடிக்​கடி மதிப்​பிடு​கிறோம், கேள்வி கேட்​கிறோம். ஆனால் ஒரு தலை​வர் தமது மதிப்​பீடு​களுக்​காக உறு​தி​யுடன் நிற்க வேண்​டும், முன்​னு​தா​ரண​மாக விளங்க வேண்​டும், தரத்தை உயர்த்த வேண்​டும்” என்று அவர் கூறி​னார்​.

இந்த வெற்​றி​யின் மூலம் மிஸ் யுனிவர்ஸ் பட்​டத்தை போர்ட்டோ ரிகோ 6-வது முறை​யாகக் கைப்​பற்​றி​யுள்​ளது. இதற்கு முன்​பு, மரிசோல் மலாரெட் (1970), டெபோரா கார்த்​தி-டியூ (1985), தயனாரா டோரஸ் (1993), டெனிஸ் குவினோனெஸ் (2001), சுலெய்கா ரிவேரா (2006) ஆகியோர் பட்​டம் வென்​றுள்​ளனர்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT