உலகம்

ஆகஸ்ட் 20-ல் அதிபர் தேர்தல்: வங்கதேச தேர்தல் ஆணை​யம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

டாக்கா: கடந்த 2024 ஜூலை-ஆகஸ்ட் மாதங்​களில் நடை​பெற்ற மாணவர்​கள் போராட்​டத்​தைத் தொடர்ந்​து, பிரதம​ராக இருந்த ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் அரசு கவிழ்ந்​தது. இதையடுத்து ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் புகுந்​தார்.

அப்​போதைய அரசி​யல் மாற்​றங்​களுக்​குப் பிறகும், ஹசீனா ஆதரவாள​ரும் 1971 விடு​தலைப் போராட்ட வீரரு​மான முகமது ஷஹாபுதீன் (76) மட்​டுமே அரசி​யல் சாசனப் பதவி​யான அதிபர் பொறுப்​பில் நீடித்து வந்​தார்.

பிரதமர் தாரிக் ரஹ்​மான் தலை​மையி​லான தற்​போதைய புதிய அரசுடன் ஏற்​பட்ட இணக்​கமற்ற அரசி​யல் சூழல் மற்​றும் உடல்​நலக் குறைவு காரண​மாக முகமது ஷஹாபுதீன் தனது பதவியை 2 வாரங்​களுக்கு முன்பு ராஜி​னாமா செய்​தார்.

இந்​நிலை​யில், வங்​கதேசத்​தில் ஆகஸ்ட் 20-ம் தேதி அதிபர் தேர்​தல் நடை​பெறும் என அந்​நாட்​டுத் தேர்​தல் ஆணை​யம் நேற்று அறி​வித்​தது. வேட்​புமனுத் தாக்​கல் ஆகஸ்ட் 13, வேட்​புமனு பரிசீலனை ஆகஸ்ட் 16, மனுக்​களைத் திரும்​பப்​பெற கடைசி நாள் ஆகஸ்ட் 18 என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT