உலகம்

உளவு பார்க்கப்படுவோம் என்ற சந்தேகத்தால் சீன பரிசை குப்பையில் வீசிய அதிபர் ட்ரம்ப் குழுவினர்

செய்திப்பிரிவு

பெய்ஜிங்: சீனா​விற்கு இரண்டு நாள் பயண​மாக சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மையி​லான குழு​வினர், ஏர் போர்ஸ் விமானத்தை விட்டு இறங்​கும் போதே தங்​களது செல்​போன்​கள் மற்​றும் எலக்ட்​ரானிக் சாதனங்​களை ‘பாரடே’ என்ற பைகளில் (Faraday bags) வைத்​து​விட்​டுச் சென்​றனர். இதற்​குள் இருந்​தால் யாரும் ஹேக் செய்து தகவல்​களை திருட முடி​யாது. அதிபர் ட்ரம்ப்​புடன் சென்ற குழு​வினர் 2 நாள் பயணத்​தில் தற்​காலிக போன்​கள் (பர்​னர் போன்) மற்​றும் தற்​காலிக மின்​னஞ்​சல் முகவரி​களை மட்​டுமே பயன்​படுத்​தினர்.

சீனா சென்ற அமெரிக்க குழு​வினருக்​கு, சீன அதி​காரி​கள் ஏராள​மான பரிசுப் பொருட்​கள், அடை​யாள அட்​டைகள், பேட்​ஜ்கள், அழைப்​பிதழ்​கள் போன்​றவற்றை வழங்​கினர்.

அமெரிக்க குழு​வினர் சீனாவை விட்டு புறப்​படும்​போது, அவர்களுக்கு ஒரு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது. சீனா தொடர்​பான எந்த பொருட்​களும் அதிபரின் விமானத்​துக்​குள் கொண்டு வரக் கூடாது என உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது.

இதற்​காக மிகப் பெரிய குப்பை தொட்​டி​யும் விமானத்​தின் படிக்கட்டு அரு​கில் வைக்​கப்​பட்​டது. அதில் சீன பரிசுப் பொருட்கள் உட்பட சீனா​வில் வழங்​கப்​பட்ட அனைத்​தை​யும் அதிபர் ட்ரம்ப்​புடன் வந்த அமெரிக்க அதி​காரி​கள் மற்​றும் குழு​வினர் வீசி எறிந்​தனர்.

உளவு பார்ப்பதில் சீன நிபுணர்கள் கில்லாடிகள் என்பதால், சீனா பரிசளித்த பொருட்​களை அமெரிக்​க அதி​காரி​கள்​ குப்​பை​யில்​ வீசி aஎறிய உத்தரவிடப்பட்டது.

SCROLL FOR NEXT