உலகம்

ஐ.நா. சபைக்கு மாற்றாக புதிய அமைப்பை தொடங்கிய ட்ரம்ப்: ரூ.9,000 கோடி செலுத்தி நிரந்தர உறுப்பினராக அழைப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஐ.​நா. சபைக்கு மாற்​றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கி உள்​ளார். இந்த புதிய அமைப்​பில் ரூ.9,000 கோடி கட்டணம் செலுத்தி உறுப்​பின​ராக சேரலாம் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை இஸ்​ரேல் ராணுவத்​துக்​கும் பாலஸ்​தீனத்​தின் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் அமைப்​புக்​கும் இடையே போர் நடை​பெற்​றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்​ரேல், ஹமாஸ் இடையே அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

போரால் பாதிக்​கப்​பட்ட காசா நகரை மறுசீரமைப்பு செய்​யும் பணிகளுக்​காக கடந்த ஆண்டு நவம்​பரில் ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. ஆனால் ஐ.நா. சபை பயனற்​றது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து விமர்​சித்து வந்​தார். இந்த சூழலில் ஐ.நா. சபைக்கு மாற்​றாக ‘‘போர்டு ஆப் பீஸ்’’ என்ற புதிய சர்​வ​தேச அமைப்பை அவர் தொடங்கி உள்​ளார்.

புதிய அமைப்​பின் தலை​வ​ராக அதிபர் ட்ரம்ப் பொறுப்​பேற்று உள்ளார். அமெரிக்க வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ, சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் ட்ரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர், பிரிட்​டிஷ் முன்​னாள் பிரதமர் டோனி பிளேர், அப்​போலோ குளோபல் நிறுவன தலைமை செயல் அதி​காரி மார்க் ரோவன், இந்திய வம்​சாவளியை சேர்ந்த உலக வங்கி தலை​வர் அஜய் பங்​கா, அமெரிக்க தேசிய பாது​காப்பு துணை ஆலோ​சகர் ராபர்ட் கேப்​ரியேல் ஆகியோர் உறுப்​பினர்​களாக நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.

புதிய சர்​வ​தேச அமைப்​பில் உலக நாடு​கள் நிரந்தர உறுப்பினராக சேரலாம். இதற்கு தலா ரூ.9,000 கோடி கட்​ட​ணம் செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இந்த புதிய அமைப்பு காசா​வின் மறுசீரமைப்பு பணி​களில் ஈடு​படும். இந்​தியா, பாகிஸ்​தான் உட்பட பல்​வேறு நாடு​கள் ‘‘போர்டு ஆப் பீஸ்’’ அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டு இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

இதுகுறித்து ஐ.நா. சபை​யின் மூத்த அதி​காரி டேனியல் போர்டி கூறும்​போது, “உலக விவ​காரங்​களில் தலை​யிட அமெரிக்கா விரும்​பு​கிறது. இதற்​காக புதிய அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டு உள்​ளது. இது குறுக்​கு வழி’’ என்​று குற்​றம்​ சாட்​டி​னார்​.

SCROLL FOR NEXT