உலகம்

பிரதமர் மோடி - ஈரான் அதிபர் மசூத் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பேச்சு

கிர்கிஸ்தானில் ஷாங்காய் உச்சி மாநாட்டின் இடையே...

செய்திப்பிரிவு

பிஷ்கெக்: கிர்​கிஸ்​தானில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் நேற்று நேரில் சந்​தித்து இருதரப்பு உறவு​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

அமெரிக்​கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்​றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்​கிய வர்த்தக கூட்​டாளி​யாக விளங்கும் இந்​தியா போரை நிறுத்​த​வும், அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​சினைக்கு தீர்வு காண​வும் இருதரப்​பை​யும் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதே​நேரத்​தில் இந்​தியா ஈரானுடன் வர்த்​தகம் செய்​வதை கடுமை​யாக எதிர்த்து வரும் அமெரிக்கா இது தொடர்​பாக இந்​திய நிறு​வனங்​கள் மீது பொருளா​தா​ரத் தடைகளை விதித்து வரு​கிறது.

இந்த சூழலில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் நேற்று நேரில் சந்​தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர். கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்​டின் இடையே இந்த சந்​திப்பு நடைபெற்றது. பிப்​ர​வரி​யில் ஈரான்​-அமெரிக்கா போர் தொடங்கிய பிறகு இரு​நாட்டு தலை​வர்​களும் நேரில் சந்​தித்​தது இதுவே முதல்​முறை​யாகும்.

இந்த சந்​திப்​பின் போது, இருதரப்பு உறவு​களின் சமீபத்​திய நிலை குறித்து இரு தலை​வர்​களும் ஆய்வு செய்​ததோடு, ஈரானுக்​கும் இந்தி​யா​வுக்​கும் இடையே உள்ள கூட்டு ஒத்​துழைப்பை வலுப்படுத்​து​வது மற்​றும் விரிவுபடுத்த வேண்​டியதன் அவசியத்தை வலி​யுறுத்​தினர். முன்​ன​தாக ஜூன் மாதம், பிரதமர் மோடி​யும் பெசெஷ்கி​யானும் தொலைபேசி​யில் உரை​யாடினர். அப்​போது மோதலை முடிவுக்​குக் கொண்​டுவர எட்​டப்​பட்ட புரிந்துணர்​வு​களை வரவேற்ற பிரதமர் மோடி, நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்​தன்​மைக்​கான தொடர்ச்​சி​யான முயற்​சிகளின் அவசி​யத்தை வலியுறுத்​தி​யது குறிப்​பிடத்​தக்​கது.

ஆர்​மேனிய பிரதமருடன் பேச்​சு​

ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் மாநாட்​டின் இடையே ஆர்மேனிய பிரதமர் நிகோல் பஷினியனை​யும் பிரதமர் மோடி சந்​தித்​தார். பாது​காப்​பு, பொருளா​தா​ரம், மருந்​து, அறி​வியல் மற்றும் தொழில்​நுட்​பம், கலாச்​சா​ரம் மற்​றும் கல்வி உள்​ளிட்ட பல்வேறு துறை​களில் இருதரப்பு ஒத்​துழைப்பை மேலும் வலுப்படுத்​து​வது குறித்து இரு தலை​வர்​களும் விவா​தித்​தனர்.

மேற்கு ஆசி​யா​வின் நிலைமை உள்​ளிட்ட பிராந்​திய மற்​றும் உலகளா​விய முன்​னேற்​றங்​கள் குறித்​தும் அவர்​கள் கருத்துகளைப் பரி​மாறிக் கொண்​டனர். இருதரப்பு உறவு​களை மேலும் ஆழப்​படுத்​த​வும், விரிவுபடுத்​த​வும் ஆர்​மேனி​யா​வுடன் நெருக்​க​மாக பணி​யாற்ற இந்​தியா விரும்​புவ​தாக பிரதமர்​ மோடி தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT