உஸ்பெகிஸ்தான் அரசு சார்பில் மிகச் சிறந்த வெளிநாட்டு தலைவர்களுக்கு, உயர்ந்த நிலை நட்பு என்ற பொருள்படும் ‘ஒலி தராஜலி தஸ்த்லிக்’ உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேற்று வழங்கி கவுரவித்தார். படம்: பிடிஐ

 
உலகம்

இந்தியா - உஸ்பெகிஸ்தான் இடையே 11 ஒப்பந்தம்: பிரதமர் மோடி, அதிபர் ஷவ்கத் முன்னிலையில் கையெழுத்து

செய்திப்பிரிவு

தாஷ்கண்ட்: உஸ்​பெகிஸ்​தான் அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயேவைப் பிரதமர் நரேந்​திர மோடி தாஷ்கண்​டில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, நீண்ட கால அடிப்​படை​யில் யுரேனி​யம் சப்​ளை, வர்த்​தகம், பாது​காப்​பு, எரிசக்தி உட்பட 11 துறை​களில் ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

உஸ்​பெகிஸ்​தான் தலைநகர் தாஷ்கண்​டுவில் பிரதமர் மோடி , அந்த நாட்டு அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயேவ் இருவரும் நேற்று அதி​காரப்​பூர்​வ​மாகச் சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது வர்த்​தகம், பாது​காப்​பு, எரிசக்​தி, கலாச்​சா​ரம், உயர் கல்​வி, அறி​வியல் ஆராய்ச்​சி, ஆயுர்​வேதம், சுற்​றுச்​சூழல் பாது​காப்​பு, அகழ்​வா​ராய்ச்​சி, சுற்​றுலா, கனிம வளம், புவி​யியல் ஆராய்ச்சி தொடர்​பாக இரு நாடு​கள் இடையே 11 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின. குறிப்​பாக நீண்ட கால அடிப்​படை​யில் இந்​தி​யா​வுக்கு யுரேனி​யம் வழங்க உஸ்​பெகிஸ்​தானுடன் முக்​கிய ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

பின்​னர் பிரதமர் மோடி​யும் அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயே​வும் கூட்​டாக நிருபர்​களுக்கு பேட்​டியளித்​தனர். அப்​போது பிரதமர் மோடி கூறிய​தாவது: இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான் இடையி​லான ராஜ்ஜிய ரீதியி​லான உறவு 15 ஆண்​டு​களைக் கடந்​துள்​ளது. இந்த நேரத்​தில் இரு நாடு​கள் இடையி​லான உறவை அடுத்த கட்​டத்​துக்கு எடுத்​துச் செல்ல முடிவு செய்​யப்​பட்டு உள்​ளது. நீண்ட கால அடிப்​படை​யில் இந்​தி​யா​வுக்கு யுரேனி​யம் வழங்க உஸ்​பெகிஸ்​தான் முன்​வந்​திருக்​கிறது. இதற்கு தேவை​யான கட்​டமைப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

செயற்கை நுண்​ணறி​வு, டிஜிட்​டல் உள்​கட்​டமைப்​பு, அரிய வகை கனிமங்​கள், மரபு​சாரா எரிசக்​தி, விண்​வெளி, அணு சக்தி உள்​ளிட்ட துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்​படும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

அதிபர் ஷவ்​கத் மிர்​சி​யோயேவ் கூறிய​தாவது: பிரதமர் மோடி தலை​மை​யில் இந்​தியா டிஜிட்​டல் தொழில்​நுட்​பம், தகவல் தொழில்​நுட்​பம், செயற்கை நுண்​ணறி​வு, விண்​வெளி துறை​களில் அபார சாதனை படைத்து வரு​கிறது.

சர்​வ​தேச அரங்​கில் அனைத்து நாடு​களின் நன்​மைக்​காக இந்​தியா தொடர்ந்து குரல் எழுப்பி வரு​கிறது. உஸ்​பெகிஸ்​தானில் மகாத்மா காந்தி மையம், லால் பகதூர் சாஸ்​திரி மையம் ஆகியவை செயல்​படு​கின்​றன. இதன்​மூலம் இரு நாடு​கள் இடையி​லான கலாச்​சார உறவு வலு​வடைந்து வரு​கிறது. உஸ்​பெகிஸ்​தானின் மிக​வும் நம்​பக​மான நட்பு நாடாக இந்​தியா விளங்​கு​கிறது.

இந்​தி​யர்​கள் விசா இல்​லாமல் 30 நாட்​கள் உஸ்​பெகிஸ்​தானில் தங்​கி​யிருக்க அனு​மதி வழங்​கப்​பட்டு உள்​ளது. வர்த்​தகம், சுற்​றுலா துறை​களில் இரு நாடு​கள் இடையி​லான உறவு வலு​வடைந்து வரு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இந்​தி​யா​வில் தற்​போது அணுசக்தி மூலம் 8.8 ஜிகா​வாட் மின்​சா​ரம் உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் அணுசக்தி மின் உற்​பத்​தியை 100 ஜிகா​வாட்​டாக அதி​கரிக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

இதற்​காக ஆஸ்​திரேலி​யா, கனடா, அமெரிக்​கா, கஜகஸ்​தான், துர்க்​மேனிஸ்​தான், தஜிகிஸ்​தான், கிர்​கிஸ்​தான் உள்​ளிட்ட நாடு​களிடம் இருந்து யுரேனி​யத்தை வாங்க ஏற்​கெனவே ஒப்​பந்​தம் செய்​யப்​பட்டு உள்​ளது. தற்​போது உஸ்​பெகிஸ்​தானிடம் யுரேனி​யத்தை வாங்க புதிய ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது.

உஸ்​பெகிஸ்​தானில் இருந்து நேற்று இரவு கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​குக்​குப் பிரதமர் மோடி சென்​றார். அங்கு இன்​றும் நாளை​யும் நடை​பெறும் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் அவர் பங்​கேற்​கி​றார்.

இந்த மாநாட்​டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கைப் பிரதமர் மோடி சந்​தித்​துப் பேசு​வார் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

தாஷ்கண்​டில் நேற்று காலை சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​று, உக்​ரைன் மக்​களுக்​குப் பல்​வேறு யோகாசனங்​களைக் கற்​றுக் கொடுத்​தார். இதுதொடர்​பான செல்பி வீடியோவை அவர் தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்​டார்.

பிரதமர் மோடிக்கு உயரிய விருது

உஸ்பெகிஸ்தான் அரசு சார்பில் மிகச் சிறந்த வெளிநாட்டு தலைவர்களுக்கு ‘ஒலி தராஜலி தஸ்த்லிக்’ என்ற மிக உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவ் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசும்போது, “உஸ்பெகிஸ்தானின் மிக உயரிய விருதைப் பெற்றதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இரு நாட்டு ஆழமான உறவுக்காக இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்” என்று தெரிவித்தார். அமெரிக்கா, ரஷ்யா உட்பட 35 நாடுகள் பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே மிக உயரிய விருதினை வழங்கி உள்ளன. இந்த வரிசையில் தற்போது உஸ்பெகிஸ்தான் அரசு 36-வது மிக உயரிய விருதினை வழங்கியிருக்கிறது.

SCROLL FOR NEXT