உலகம்

ஈரான் போருக்கு கூடுதலாக ரூ.18 லட்சம் கோடி நிதி தேவை: பென்டகன் கோரிக்கை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈ​ரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) தேவை என அமெரிக்க ராணுவ தலை​மையகம் பென்டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது.

ஈரான் ​மீது அமெரிக்க மற்​றும் இஸ்​ரேலிய படைகள் போர்தொடுத்​தன. இதற்​காக மிகப் பெரிய படையை அமெரிக்கா அனுப்​பியது. ஈரான் மீதான தாக்​குதல் கடந்த 20 நாட்​களுக்கு மேலாக தொடர்​கிறது. ஈரானில் ஏராள​மான இலக்​கு​களை குறி​வைத்து அமெரிக்கா தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

          

இந்​நிலை​யில் அமெரிக்க ராணுவத் தலை​மையகம் ஈரான் போருக்கு கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் (ரூ.18 லட்​சம் கோடி) நிதி தேவை என கோரிக்கை விடுத்​துள்​ளது.

இது மிக​வும் அதி​க​மான தொகையாகும். இந்த புதிய செல​வின கோரிக்​கைக்கு அமெரிக்கா நாடாளு​மன்​றத்​தில் ஆதரவு கிடைக்​குமா என தெரிய​வில்​லை. இது குறித்து அமெரிக்க பாது​காப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் கூறுகை​யில், “இந்த தொகை​யில் மாற்​றம் ஏற்​படலாம். ராணுவத்​துக்கு தேவை​யான நிதியை உறுதி செய்ய நாடாளு​மன்​றத்தை அணுக உள்​ளோம். மோச​மான நபர்​களை கொல்ல ராணுவத்​துக்கு கூடு​தல் நிதி தேவைப்​படு​கிறது” என்​றார்​.

SCROLL FOR NEXT