இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக அசிம் முனீர் தற்போது பதவி வகித்து வருகிறார். அவரை பாகிஸ்தானின் முப்படைத் தலைமை தளபதியாக (சிடிஎஃப்) நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கான ஒப்புதலை பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வழங்கியுள்ளார். இந்தியாவில் முப்படைத் தலைமைத் தளபதி என்ற பொறுப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு சவால் அளிக்க இதுபோன்ற பதவியை பாகிஸ்தான் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன்மூலம் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் உயர் பொறுப்புக்கு அசிம் முனீர் வந்துள்ளார். மேலும் நாட்டின் ஏவுகணைகள், அணு ஆயுதங்களைக் கையாளும் பொறுப்பும் அசிம் முனீரிடம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.