உலகம்

திரிசூலி வங்கி லாக்கரில் இருந்து ரூ.51 கோடி தங்கம், ரொக்கம் மீட்பு: நேபாள காவல் துறை துணிச்சலான நடவடிக்கை

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நே​பாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் திரிசூலி பகு​தி​யில் உள்ள விவ​சாய மேம்​பாட்டு வங்கி பாதிக்​கப்​பட்​டது. அங்​குள்ள லாக்​கரில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்​கம், ரூ.50 கோடி மதிப்​பிலான தங்​கம் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை காவல் துறை​யினர் மீட்​டுள்​ளனர்.

நேபாளத்​தின் ரசுவா மாவட்​டத்​தின் திரிசூலி பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை திடீரென கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, அங்​குள்ள விவ​சாய மேம்​பாட்டு வங்​கி​யின் திரிசூலி துங்கே கிளை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது.

இதையடுத்து ஆபத்​தான சூழ்​நிலை​யிலும் உடனடி​யாகக் களமிறங்​கிய நேபாள காவல் துறை​யினர், சுமார் 8 மணி நேரம் போராடி வங்கி லாக்​கரிலிருந்த ரூ.1.5 கோடி ரொக்​கம், ரூ.50 கோடி மதிப்​பிலான தங்​கம் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை மீட்டு, பாது​காப்​பான இடத்​துக்கு மாற்​றினர். இந்த மீட்பு நடவடிக்கை குறித்த வீடியோவை நேபாள காவல் துறை எக்ஸ் பக்கத்​தில் பகிர்ந்​துள்​ளது.

இதனிடையே, வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்ட ரசுவா பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலை​வில் உள்ள சித்வான் வனப்​பகு​தி​யில், அடை​யாளம் தெரி​யாத நூற்றுக்கணக்கான உடல்​கள் அழுகத் தொடங்​கின. இதனால் பொது​மக்​களின் சுகா​தா​ரத்​தைக் கருத்​தில் கொண்​டு, வழக்​க​மாக நடைப​யிற்சி மேற்​கொள்​ளப்​படும் அந்த காட்​டுப் பகு​தி​யிலேயே அதி​காரி​களால் பல உடல்​கள் அவசர​மாக அடக்​கம்​ செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT