வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு 37.5 டன் நிவாரண பொருட்களுடன் 2-வது விமானத்தை இந்தியா நேற்று அனுப்பியது. படம்: பிடிஐ

 
உலகம்

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 359 ஆக உயர்வு: மாயமான 1,500 பேரைத் தேடும் பணி தீவிரம்

நிவாரணப் பொருட்களுடன் 2-வது விமானத்தை அனுப்பியது இந்தியா

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நே​பாள வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மாய​மான 1,500 பேரைத் தேடும் பணி தீவிர​மாக நடந்து வரு​கிறது. நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானத்தை நேபாளத்​துக்கு இந்​தியா அனுப்​பியது.

மலைப்​பிரதேச​மான நேபாள நாட்​டின் வடக்கே திபெத் எல்லை உள்​ளது. அதன் அருகே உள்ள ரசுவா மாவட்​டத்​தில் போடே கோசி என்ற நதி ஓடு​கிறது. இந்த நதி​யில் நேற்று முன்​தினம் காலை திடீர் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டது.

பல அடி உயரத்​துக்​குக் கீழ் நோக்கி பாய்ந்த இந்த பெரு​வெள்​ளம் ரசு​வா, தாதிங் மற்​றும் நுவாகோட் ஆகிய 3 மாவட்​டங்​களைப் புரட்​டிப் போட்​டது. வானுயர்ந்த கட்​டிடங்​கள், சாலை​கள், பாலங்​கள், நீர்​மின் நிலை​யங்​கள் என அனைத்​தை​யும் வெள்​ளம் சுருட்​டிச் சென்​றது.

இடி​பாடு​களு​டன், சேறும் சகதி​யு​மாய் பாய்ந்​தோடிய வெள்​ளத்​தில் ஏராள​மான மக்​கள் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 359 ஆக உயர்ந்​துள்​ளது. மேலும், 800 வெளி​நாட்​டினர் உட்பட 1,500-க்​கும் மேற்​பட்​டோர் காணா​மல் போயுள்​ளள்​ள​தாக நேபாள அரசு நேற்று தெரி​வித்​தது.

இதுகுறித்து நேபாள காவல் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வெள்​ளம் பாதித்த மாவட்​டங்​களில் முழு வீச்​சில் மீட்​புப் பணி​கள் நடை​பெறு​கின்​றன. 5,000-க்​கும் மேற்​பட்ட ராணுவ வீரர்​கள் மற்​றும் போலீ​ஸார் மீட்​புப் பணி​களில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். இது​வரை 359 உடல்​கள் மீட்​கப்​பட்​டுள்​ளன.

வெளி​நாட்​டினர் உட்பட 1,500 பேர் மாய​மாகி உள்​ளனர். அவர்​களைத் தேடும் பணி நடந்து வரு​கிறது. இந்​தத் தருணத்​தில், எங்​கள் முன்​னுரிமை என்​பது உயிர்​களைக் காப்​பது, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆதரவு அளிப்​பது, மீட்புமற்​றும் நிவாரணப் பணி​களை மேற்​கொள்​வ​தாக உள்​ளது” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

காத்​மாண்​டு​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அந்​நாட்​டின் வெளி​யுறவு அமைச்​சர் சிஷிர் கனால் கூறிய​தாவது: இந்த பேரிட​ரால் ஏற்​பட்ட முழு சேதத்தை அளவிட அதி​காரி​கள் முயன்று வரு​கின்​ற​னர். 1,500 பேர் காணா​மல் போயுள்​ளனர். இவர்​களில் 300 பேர் இந்​தி​யர்​கள். அவர்​களில் பெரும்​பாலானோர் மானசரோவர் யாத்​திரி​கர்​கள். அவர்​களைத் தொடர்பு கொள்ள அரசு முயன்று வரு​கிறது.

நேபாள குடிமக்​களின் பாது​காப்பு மற்​றும் நலனில் நாங்​கள் எவ்​வளவு அக்​கறை கொண்​டுள்​ளோமோ அதே அளவு வெளி​நாட்​டினரின் பாது​காப்பு மற்​றும் நலனிலும் நாங்​கள் அக்​கறை கொண்​டுள்​ளோம். இந்​திய அரசு ஏற்​கெனவே நிவாரண உதவி​களை அனுப்​பி​யுள்​ளது. நாங்​கள் எங்​கள் நன்​றியைத் தெரி​வித்​துக் கொள்​கி​றோம்.

இந்த நெருக்​கடி​யான நேரத்​தில் நேபாளத்​துக்​குத் துணை நிற்​கு​மாறும், நாடு தன்​னைத் தானே மீட்​டெழுப்ப தொடர்ந்து இங்கு வருகை தரு​மாறும் நாங்​கள் உலக நாடு​களிடம் வேண்​டு​கோள் விடுக்​கி​றோம். உடனடி நிவாரண நடவடிக்​கை​கள் மட்​டுமல்​லாது, நேபாளத்​துடன் உலகம் தொடர்ந்து இணைந்​திருப்​பதும் நாங்​கள் மீண்டு வர மிக முக்​கி​யம்.

கடந்த 2015-ம் ஆண்டு ஏற்​பட்ட பெரும் நிலநடுக்​கத்​துக்​குப் பிறகும் நாங்​கள் வலிமை​யுடன் மீண்டு வந்​தோம். நேபாளம் தன்​னைத் தானே சீரமைத்​துக்​கொள்​ளும். இவ்​வாறு வெளி​யுறவு அமைச்​சர் சிஷிர் தெரி​வித்​தார்.

நேபாள பிரதமர் பாலேந்​திரஷா வெள்​ளம் பாதித்த நுவாகோட் மாவட்​டத்​துக்குத் தரை வழிப் பயண​மாகச் சென்று சேதங்​களை ஆய்வு செய்​தார். அப்​போது அவர் மீட்​புப் பணி​கள் குறித்து உள்​ளூர் அதி​காரி​கள், மக்​கள் பிர​தி​நி​தி​கள் மற்​றும் பாது​காப்​புப் படை​யினரிடம் நில​வரங்​களைக் கேட்​டறிந்​தார். தொடர்ந்​து, மீட்​புப் பணி​களைத் துரிதப்​படுத்​த​வும், மக்​களுக்​குத் தேவை​யான நிவாரணத்தை விரை​வாக வழங்​க​வும் அதி​காரி​களுக்கு அவர் உத்​தர​விட்​டார்.

இந்​தியா உதவி நேபாள நாட்​டுக்கு அனைத்து வழிகளி​லும் உதவ தயா​ராக இருப்​ப​தாகப் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று முன்​தினம் தெரி​வித்​தார். அதன்​படி தற்​காலிக கூடாரங்​கள், போர்​வை​கள், மருந்​துப் பொருட்​கள் உள்​ளிட்​டவை அடங்​கிய 10 டன் நிவாரணப் பொருட்​கள் இந்​திய விமானப் படை விமானம் மூலம் நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டன.

அதன் தொடர்ச்​சி​யாக நிவாரணப் பொருட்​களு​டன் கூடிய 2-வது விமானம் நேற்று நேபாளத்​துக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது என்று மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​தார். அத்​தி​யா​வசிய பொருட்​கள், மருந்​துகள் மற்​றும் உணவுப் பொட்​டலங்​கள் உட்பட 37.5 டன் நிவாரண பொருட்​கள் அந்த விமானத்​தில் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளன என்று அவர் தெரி​வித்​தார்.

மீண்டும் வெள்ள அபாயம்: சீன நீர்வளத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சீனா - நேபாள எல்லையில் சோச்சென் கோலா, புரேபு சாங்போ நதிகள் சங்கமிக்கும் இடத்தில் மிகப் பெரிய ஏரி உருவாகி உள்ளது. இந்த ஏரி தற்போது நிரம்பி வழிகிறது.

அடுத்த சில நாட்களில் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நேபாளத்தின் போடே கோசி, திரிசூலியில் மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்” என்று எச்சரித்துள்ளது. இதன் காரணமாக போடே கோசி, திரிசூலி நதிகளின் கரையோரம் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணியில் நேபாள அரசு ஈடுபட்டுள்ளது.

SCROLL FOR NEXT