நேபாளத்தில் நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி லலித்பூரில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்த பொதுமக்கள். படம்: பிடிஐ

 
உலகம்

நேபாளத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

பொதுத்தேர்தலில் 60% வாக்குப்பதிவு

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நே​பாளத்​தில் நேற்று நடை​பெற்ற பொதுத் தேர்​தலில் 60 சதவீத வாக்​கு​கள் பதி​வா​யின. வாக்​குப்​ப​திவு முடிந்த நிலை​யில் வாக்கு எண்​ணிக்கை உடனடி​யாகத் தொடங்​கியது. தேர்​தலில் பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர்.

நேபாளத்​தில் கடந்த ஆண்டு ஆட்​சிக் கவிழ்ப்​புக்கு வித்​திட்ட ஜென் இசட் இளைஞர்​களின் போராட்​டத்​துக்​குப் பிறகு, அந்​நாட்​டின் முதல் பொதுத் தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. நேபாள நாடாளு​மன்​றத்​தின் கீழ​வை​யான பிர​தி​நி​தி​கள் சபை​யில் மொத்​தம் 275 இடங்​கள் உள்​ளன. இதில் 165 இடங்​கள் நேரடித் தேர்​தல் மூல​மும் மீத​முள்ள 110 இடங்​களுக்கு விகி​தா​ச்சார பிர​தி​நி​தித்​துவ முறை​யிலும் உறுப்​பினர்​கள் தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ளனர்.

          

நேரடி தேர்​தலில் 3,406 வேட்​பாளர்​களும், விகி​தா​ச்சார முறை​யில் 3,135 வேட்​பாளர்​களும் களத்​தில் உள்​ளனர். 1.89 கோடிக்​கும் அதி​க​மான தகுதிபெற்ற வாக்​காளர்​களுக்​காக நாடு முழு​வதும் 10,967 வாக்​குச் சாவடிகள் அமைக்​கப்​பட்டு இருந்​தன.

தேர்​தலை முன்​னிட்டு கடந்த புதன்​கிழமை முதல் 3 நாட்​கள் அரசு விடு​முறை அறிவிக்​கப்​பட்டு இருந்​தது. கடந்த 2-ம் தேதி நள்​ளிர​வுடன் பிரச்​சா​ரம் நிறைவடைந்த நிலை​யில், நேற்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்​குப் பதிவு நடை​பெற்​றது. பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் நின்று ஆர்​வத்​துடன் வாக்​களித்​தனர்.

தேர்​தலை​யொட்டி நேபாள ராணுவம், காவல்​துறை​யின் சுமார் 3.41 லட்​சம் படை​யினர் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டனர். வாக்கு எண்​ணிக்கை முடிந்த நிலை​யில் மொத்​தம் 60 சதவீத வாக்​கு​கள் பதி​வான​தாக தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இருப்​பினும், இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு நில​வரம் பின்​னர் தெரிய வரும் என்​றும் அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்​.

வாக்கு எண்ணும் மையங்கள்: ​வாக்​குப்​ப​திவு முடிந்த நிலை​யில் வாக்​குப்​பெட்​டிகள் சீல் வைக்​கப்​பட்டு வாக்கு எண்​ணும் மையங்​களுக்​குக் கொண்டு செல்​லப்​பட்​டன. இதைத் தொடர்ந்து வாக்கு எண்​ணிக்கை உடனடி​யாகத் தொடங்​கிய​தாக நேபாள தேர்​தல் ஆணை​யர் ஜானகி குமார் துலதர் தெரி​வித்​தார். தேர்​தல் முடிவு​கள் முழு​மை​யாக தெரியவர 2 நாட்​களாகும் என்று தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT