புளோரிடா: நிலவுக்கு கடைசியாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்போலோ விண்கலம் மூலம் 3 வீரர்களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு பின் தற்போது ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் ஓரியான் விண்கலத்தை நிலவுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்சியாக அனுப்பியது. இந்த விண்கலத்தில் நாசா கமாண்டர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளேவர், கிறிஸ்டினா கோச், கனடா விண்வெளி வீரர் ஜெரிமி ஹேன்சன் ஆகியோர் பயணம் செய்தனர்.
இந்த 4 வீரர்களும் 10 நாள் பயணம் மேற்கொண்டு நிலவை சுற்றி பயணம் செய்வர். ஆனால், நிலவில் தரையிறங்க மாட்டார்கள். அதற்கு பதில் நிலவைச் சுற்றி 6 லட்சம் மைல்கள் தூரம் பயணம் செய்து, நிலவின் மேற்பரப்பை படம் பிடிப்பர். மேலும் எதிர்கால திட்டங்களுக்கான முக்கிய தகவல்களை சேகரிப்பர். நிலவை சுற்றி வந்தபின் விண்கலம் பசிபிக் கடலில் வரும் 11-ம் தேதி பாராசூட் மூலம் விழும். அதை அமெரிக்க கடற்படையினர் மீட்பர்.