வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகின் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், “எனது விண்வெளி லேசர்கள் இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக சுமார் ரூ.4,700 கோடிக்கு மேல் வாரியிறைத்த எலான் மஸ்க், டெக்சாஸ் உள்ளிட்ட பாரம்பரியமிக்க குடியரசுக் கட்சிப் பகுதிகளில் அக்கட்சி சந்தித்த பலத்த தோல்விக்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் அவர் இந்த இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
கடும் விமர்சனம்
முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்திலிருந்து அமெரிக்க செனட்டராக தேர்வாகியுள்ள ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தாலாரிகோ தனது வெற்றி விழாவில், எலான் மஸ்க் மற்றும் அதிபர் டொனால்டு ட்ரம்பை கடுமையாக விமர்சித்தார்.
300 மில்லியன் டாலர்
அப்போது அவர், “அமெரிக்க வரலாற்றிலேயே இல்லாத வகையில், 300 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம், பொய்ப் பிரசாரங்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் அந்நிய போலி கணக்குகளை எதிர்த்து நின்று இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.