உலகம்

ஈரானில் உயிரிழப்பு 500+ ஆக அதிகரிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமடைகிறது போர்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் நடத்​திய தாக்​குதல் காரண​மாக ஈரானில் 500-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்துள்ளனர்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் படைகள் நடத்​திய தாக்குதலில் ஈரான் தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட 500-க்கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில் இஸ்​ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்​கள் உள்ள வளைகுடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதலை தொடங்​கி​யுள்​ளது. அத்துடன் அங்குள்ள விமான நிலை​யங்​கள், கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலையங்களை குறி​வைத்​தும் ஈரான் ட்ரோன் தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

          

இவற்றை வான் பாது​காப்பு கருவி​களை கொண்டு வளை​குடா நாடு​கள் தடுத்து வரு​கின்​றன. குவைத்​தில் உள்ள அஹமதி கச்சா எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யம் மீது தாக்​குதல் நடத்த வந்த ட்ரோன்​கள் நடு​வானில் சுட்டு வீழ்த்​தப்​பட்​டன. இதன் துகள்​கள் சிதறி விழுந்​த​தில் எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யத்​தின் 2 ஊழியர்​கள் காயம் அடைந்​தனர்.

ஈரான் மீதான தாக்​குதல் விரை​வில் முடிவுக்கு வரும் சூழல் தெரியவில்​லை. லெப​னானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்​புல்லா படை​யினர் இஸ்​ரேல் மீது தாக்​குதல் நடத்​து​வ​தால், லெப​னான் மீது இஸ்​ரேல் தாக்​குதல் நடவடிக்​கையை தொடங்​கி​யுள்​ளது. இந்நிலை​யில் ஹிஸ்​புல்லா அமைப்​பினர் சட்​ட​விரோத​மாக தாக்குதலை தொடங்​கி​யுள்​ளனர், இதற்​கும் லெப​னான் அரசுக்​கும் தொடர்​பில்லை என அந்​நாட்டு பிரதமர் நவாப் சலாம் கூறியுள்ளார்.

ஏமன் வளை​குடா பகு​தி​யில் கச்சா எண்​ணெய் கொண்டு செல்லும் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​படு​கிறது என ஓமன் கூறி​யுள்​ளது. மார்​ஷல் தீவுக்கு சொந்​த​மான ஆயில் டேங்​கர் கப்பல் மீது, ட்ரோன் படகு மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாக ஓமன் தெரி​வித்​துள்​ளது.

ஈராக்​கின் பாக்​தாத்​தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது அங்குள்ள தீவிர​வாத அமைப்பு ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. அமெரிக்கா​வுடன் பேச்​சு​வார்த்​தைக்கு தயார் இல்லை என ஈரான் கூறி​விட்​டது. இதனால் ஈரான் மீதான தாக்​குதல் தொடரும் எனத் தெரி​கிறது. ஈரான் பதில் தாக்​குதலை தொடரும் என தெரி​கிறது. இதனால்​ மத்​தி​ய கிழக்​கு நாடு​களில் போர்​ தீவிரமடைந்​து வருகிறது.

SCROLL FOR NEXT