உலகம்

ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தி மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் கைது

செய்திப்பிரிவு

மெக்​சிகோ நாட்​டின் லாஸ் மசாட்​லெகோஸ் என்ற போதைப் பொருள் கடத்​தல் கும்​பலின் தலை​வ​னாகச் செயல்​பட்டு வந்​தவர் பாஸ்டோ இசிட்ரோ மேசா புளோரஸ். அமெரிக்​கா​வின் புலனாய்வு அமைப்​பான எப்​பிஐ தேடப்​படும் குற்​றவாளி​கள் பட்​டியலில் இடம் பெற்​றுள்ள இவன், குவாசாவே பகுதி​யில் நேற்​று முன்​தினம் கைது செய்​யப்​பட்​டான்.

அவனைப் பிடிப்​ப​தற்​காக மெக்​சிகோ ராணுவம் மேற்​கொண்ட நட​வடிக்​கை​யின்​போது, ராணுவத்​தினருக்​கும், ஆயுதம் ஏந்​திய கும்​பலுக்​கும் இடையே கடுமையான மோதல் ஏற்​பட்​டது. குவாசாவே நகரின் வானில் வட்​ட​மிட்ட ராணுவ ஹெலிகாப்​டர்​களில் இருந்து சர​மாரியாக துப்​பாக்​கிச்​சூடு நடத்தி மேசா புளோரஸ் கைது செய்​யப்​பட்​டான். இது​தொடர்​பான வீடியோக்​கள் வெளியாகி​யுள்​ளன.

அமெரிக்​கா​வின் எப்​பிஐ வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பின்​படி, ஹெராயின், மெத்​தம்​ பெட்​டமைன், கோகைன், பெண்​டானில் மற்​றும் கஞ்சா உள்​ளிட்ட போதைப் பொருட்​களைப் பெரு​மளவில் அமெரிக்​கா​வுக்​குக் கடத்​து​தல், விநியோகித்​தல் மற்​றும் இறக்​குமதி செய்​தல் ஆகிய குற்​றங்​களில் இவருக்​குத் தொடர்பு இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT