இந்திய அணி 486 ரன்கள் குவித்து அசத்தல்: 118 ரன்கள் முன்னிலையுடன் ஆதிக்கம்

கே.எல்.ராகுல் 136, கில் 98, படிக்கல் 80, பந்த் 55* ரன் விளாசல்
இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்

இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்

Updated on: 
2 min read

வெலிங்டன்: நியூஸிலாந்து - இந்​தியா அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி வெலிங்​டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் நியூஸிலாந்து அணி 121 ஓவர்​களில் 368 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ஹென்றி நிக்​கோல்ஸ் 175, கிளென் பிலிப்ஸ் 118 ரன்​கள் விளாசினர்.

இதையடுத்து பேட் செய்த இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 39 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 159 ரன்​கள் எடுத்​தது. யஷஸ்வி ஜெய்ஸ்​வால் 85 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழந்​தார். கே.எல்.ராகுல் 52, தேவ்​தத் படிக்​கல் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை இந்​திய அணி தொடர்ந்து விளை​யாடியது.

கே.எல்.ராகுலும், தேவ்​தத் படிக்​கலும் பார்ட்​னர்​ஷிப்பை கட்​டமைத்​தனர். பொறுமையாக விளை​யாடிய கே.எல்.ராகுல் 207 பந்​துகளில், 8 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் தனது 13-வது சதத்தை விளாசினார். இது வௌிநாடுகளில் அவர் அடித்த 10-வது சதமாகவும் அமைந்தது. கிளென் பிலிப்ஸ் வீசிய 63-வது ஓவரின் 3-வது பந்தை கே.எல்.ராகுல் லாங் ஆன் திசையில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

அவருக்கு உறுதுணை​யாக விளை​யாடிய தேவ்​தத் படிக்​கல் 175 பந்​துகளில், 10 பவுண்​டரி​களு​டன் 80 ரன்​கள் விளாசிய நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தில் போல்​டானார். 2-வது விக்​கெட்​டுக்கு தேவ்​தத் படிக்​கல், கே.எல்.ராகுல் ஜோடி 337 பந்​துகளில் 165 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய கேப்​டன் ஷுப்​மன் கில் அதிரடி​யாக விளை​யாடினார். ஜேக்​கப் டஃபி வீசிய 101-வது ஓவரின் 3-வது பந்தை ஷுப்​மன் கில், ஸ்கொயர் லெக் திசையில் சிக்​ஸருக்கு விளாசினார்.

இந்த சிக்​ஸரால் இந்​திய அணி 368 ரன்​களை கடந்து முன்​னிலை பெறத் தொடங்​கியது. நிதானமாக விளை​யாடி வந்த கே.எல்.ராகுல் 290 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 136 ரன்​கள் எடுத்த நிலை​யில் நேதன் ஸ்​மித் பந்​தில் போல்​டானார். அப்​போது ஸ்​கோர் 103.3 ஓவர்​களில் 386 ஆக இருந்​தது. 3-வது விக்​கெட்​டுக்கு கே.எல்.ராகுல், ஷுப்​மன் கில் ஜோடி 126 பந்​துகளில், 91 ரன்​கள் எடுத்​தது.

இதையடுத்து களமிறங்​கிய ரிஷப் பந்த், தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு ரன்​கள் வேட்​டை​யாடினார். கிளென் பிலிப்ஸ் வீசிய 115-வது ஓவரில் ஷுப்​மன் கில் மிட் ஆஃப் திசையில் சிக்​ஸர் ஒன்றை விளாசினார். அதேவேளை​யில் ஜேக்​கப் டஃபி வீசிய 121-வது ஓவரின் கடைசி 2 பந்​துகளை​யும் ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்​ஸருக்கு பறக்​க​விட்​டார்.

மட்​டையை சுழற்​றிய ரிஷப் பந்த் 55 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் தனது 22-வது அரை சதத்தை கடந்​தார். சதம் அடிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​பட்ட நிலை​யில் 3-வது நாள் ஆட்​டத்​தின் கடைசி ஓவரில் ஷுப்​மன் கில், ஜேக்​கப் டஃபி பந்​தில் போல்​டானார். 146 பந்​துகளை சந்​தித்த ஷுப்​மன் கில் 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 98 ரன்​கள் விளாசினார். 4-வது விக்​கெட்​டுக்கு ஷுப்​மன் கில், ரிஷப் பந்த் ஜோடி 129 பந்​துகளில், 100 ரன்​கள் குவித்​தது.

இதையடுத்து அன்​ஷுல் கம்​போஜ் களமிறங்​கினார். 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் இந்​திய அணி 125 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 486 ரன்​கள் குவித்​தது. ரிஷப் பந்த் 55 ரன்​களு​டனும், அன்​ஷுல் கம்​போஜ் ரன் ஏதும் எடுக்​காமலும் களத்​தில் இருந்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்​கப் டஃபி, நேதன் ஸ்​மித் ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். கைவசம் 6 விக்​கெட்​கள் இருக்க 118 ரன்​கள் முன்​னிலை பெற்​றுள்ள இந்​திய அணி இன்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடு​கிறது.

சேனா நாடுகளில் சாதனை

நியூஸிலாந்​துக்கு எதிராக வெலிங்​டனில் நடை​பெற்று வரும் முதல் டெஸ்ட் போட்​டி​யின் 3-வது நாள் ஆட்​டத்​தில் இந்​திய அணி​யின் தொடக்க பேட்​ஸ்மேனான கே.எல்.ராகுல் சதம் அடித்​தார். இதன் மூலம் ‘சேனா நாடுகள்’ என அழைக்​கப்​படும் தென் ஆப்​பி​ரிக்கா, இங்​கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளி​லும் டெஸ்ட் போட்​டிகளில் சதம் அடித்த முதல் இந்​திய தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்​தார்.

34 வயதான ராகுல், நியூஸிலாந்து மண்ணில் விளையாடிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக சேனா நாடுகளில் அவர், அடித்துள்ள 8-வது டெஸ்ட் சதம் இதுவாகும்.

மேலும், சேனா நாடுகள் அனைத்திலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார். இதற்கு முன்பு முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோர் இந்தச் சாதனையை படைத்திருந்தனர். இந்திய வீரர்களைத் தவிர இலங்கையின் குமார் சங்கக்கரா, பாகிஸ்தானின் சயீத் அன்வர், யூனுஸ் கான் ஆகியோரும் சேனா நாடுகள் அனைத்திலும் டெஸ்ட் சதம் அடித்திருந்தனர்.

<div class="paragraphs"><p>இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்</p></div>
தமிழகத்தில் 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு: தொழில்துறை தகவல்

X