உலகம்

நிறுவனத்தை ரூ.16,000 கோடிக்கு விற்று ஊழியர்களுக்கு ரூ.2,000 கோடி வழங்கிய நிர்வாகம்

செய்திப்பிரிவு

லூசியானா: அமெரிக்காவின் லூசியானா மாகாணம் மிண்டன் நகரில் ஃபைபர் பாண்ட் கார்ப்பரேஷன் என்ற மின்சாதன நிறுவனம் உள்ளது.

இந்நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடிக்கு, ஈட்டன் என்ற நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு விற்கப்பட்டது. இதில் 15 சதவீத தொகை நிறுவனத்தில் பணியாற்றும் 540 ஊழியர்களுக்கு செல்ல வேண்டும் என ஃபைபர் பாண்ட் நிறுவன உரிமையாளர் கிரகாம் வாக்கர் நிபந்தனை விதித்தார்.

இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். அதுவரை அவர்கள் பணியில் தொடர வேண்டும் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஆனால், 65 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்கள் முழுத் தொகையாக ரூ.3.7 கோடி பெற்றனர்.

SCROLL FOR NEXT