உலகம்

லஷ்கர் கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்​தானின் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள ஒரு மசூ​தி​யில் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்​தார்.

பாகிஸ்​தானிலிருந்து செயல்​படும் லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வாத அமைப்​பின் மூத்த கமாண்​டர் காரி சயீத் அப்​துல் அஜீஸ். ஜம்​மு-​காஷ்மீரில் என்​க​வுண்​டர்​களில் கொல்​லப்​பட்ட தீவிர​வா​தி​களின் குடும்​பங்​களுக்கு உதவி வழங்​கும் லஷ்கர் அமைப்​பின் துறைக்கு காரி சயீத் பொறுப்​பாள​ராக இருந்​தார்.

இவர் இஸ்​லா​மா​பாத்​தில் உள்ள குபா மசூ​திக்கு தொழுகைக்​காக சென்​றுள்​ளார். இந்​நிலை​யில், அவர் மசூ​தி​யின் நுழை​வாயி​லில் திடீரென சரிந்து விழுந்து உயி​ரிழந்​தார். அவரது இறப்​புக்​கான காரணம் உடனடி​யாகத் தெரிய​வர​வில்​லை. எனினும், மசூ​திக்கு செல்​வதற்கு முன்​பு, ஒரு உணவகத்​தில் சாப்​பிட்​ட​தாகக் கூறப்படுகிறது. இதற்​கும் உயி​ரிழப்​புக்​கும் காரணம் உள்​ளதா என போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

166 பேர் கொல்​லப்​பட்ட 2008 மும்பை தாக்​குதல் சம்​பவத்​துக்​குப் பின்​னணி​யில் உள்ள தடை செய்​யப்​பட்ட அமைப்​பைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3 முதல் 4 ஆண்​டு​களில் பாகிஸ்​தான் மற்​றும் பாகிஸ்தான் ஆக்​கிரமிப்பு காஷ்மீரின் பல்​வேறு பகு​தி​களில் அடை​யாளம் தெரி​யாத நபர்​களால் கொல்​லப்​பட்​டுள்​ள​தாக செய்தி வெளி​யானது. இந்த தகவலை லஷ்கர் தீவிர​வாதி ரிஸ்வான் ஹனிஃப் கூறும் வீடியோ ஒன்று சமீபத்​தில் வெளியானது.

அல்​காய்தா மற்​றும் தலி​பான்​களு​ட​னான தொடர்​பு​கள் காரணமாக 2005-ம் ஆண்​டில் ஐக்​கிய நாடு​கள் சபை​யால் தடை செய்​யப்​பட்ட லஷ்கர்​-இ-தொய்​பாவுடன் தொடர்​புடைய ஒரு தீவிரவா​தி, இத்​தகைய படு​கொலைகளை வெளிப்​படை​யாக ஒப்புக்​கொள்​வது இதுவே முதல்​முறை​யாகும்​. இந்​நிலை​யில்​​தான்​ ​காரி சயீத்​ மர்​ம​மான முறை​யில்​ உயி​ரிழந்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT