உலகம்

‘மீண்டும் என்விடியா நிறுவன சிஇஓ?' - ஜென்சன் ஹுவாங் விருப்பம்

வேட்டையன்

நியூயார்க்: மீண்டும் என்விடியா நிறுவனத்தின் சிஇஓ-வாக செயல்பட ஜென்சன் ஹுவாங் விருப்பம் தெரிவித்துள்ளார். அதில் தனக்கு கவுரவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வாரம் என்விடியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்பில் இருந்து அவர் விலகி இருந்தார். இந்நிலையில், சமூக வலைதளத்தில் இது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

“மீண்டும் எனது வருகையை அமெரிக்கா, என்விடியா நிறுவனம், நிறுவன ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களின் நலனுக்கு சிறந்தது என்று இயக்குநர் குழு கருதினால், அந்த அழைப்பை ஏற்று, மீண்டும் நிறுவனத்தின் சிஇஓ பணிக்கு திரும்புவேன். அதில் எனக்கு கவுரவம்.

நான் எனது தனிப்பட்ட வாழ்வில் தவறு செய்துள்ளேன். என்விடியா நிறுவனத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்த வகையில் எனது செயல்பாடுகள் அமையவில்லை. இருப்பினும் நிறுவனம் மேற்கொள்ளும் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன்” என்று ஜென்சன் ஹுவாங் கூறியுள்ளார்.

என்ன நடந்தது?

என்விடியா நிறு​வனத்​தின் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அமெரிக்க உளவுத் துறை​யால் சீன உளவாளியாக சந்​தேகிக்​கப்​படும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்​குடன் தனக்கு ரகசிய தொடர்பு இருந்​ததை அண்​மையில் ஒப்​புக் கொண்டார்.

இந்நிலை​யில், அவருக்கு என்​வி​டியா துணைத் தலை​வ​ராக பதவி வகித்து வரும் கிம்​பர்லி பாவல் உடனும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இந்த சூழலில், என்விடியா சிஇஓ பொறுப்பை கடந்த வாரம் அவர் ராஜினாமா செய்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT