உலகம்

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை அமெரிக்கா புரிந்து கொள்ளவில்லை: அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து

செய்திப்பிரிவு

நியூயார்க்: ​பாகிஸ்​தானின் எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை அமெரிக்கா புரிந்து கொள்​ள​வில்லை என்று மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்​டம் நடை​பெறுகிறது. இதில் கடந்த 26-ம் தேதி மத்​திய வெளி​யுறவு அமைச்​சர் ஜெய்​சங்​கர் பேசி​னார். அப்​போது தீவிர​வாதத்​துக்கு எதி​ரான இந்​தி​யா​வின் போர் தொடரும் என்று அவர் உறு​திபடத் தெரி​வித்​தார். மேலும் பாகிஸ்​தானின் பெயரைக் குறிப்​பி​டா​மல் அந்த நாட்​டின் தீவிர​வாத ஆதரவு கொள்​கையை மிகக் கடுமை​யாக கண்​டித்​தார்.

இதைத் தொடர்ந்து நியூ​யார்க்​கில் ஆசியா சொசைட்டி அமைப்​புக்கு அமைச்​சர் ஜெய்​சங்​கர் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது: பல தசாப்​தங்​களாக எல்லை தாண்​டிய தீவிர​வாத பிரச்​சினையை இந்​தியா எதிர்​கொண்டு வரு​கிறது. அண்டை நாட்​டைச் (பாகிஸ்​தான்) சேர்ந்த தீவிர​வாத அமைப்​பு​கள் தொடர்ந்து இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​பட்டு வரு​கின்​றன.

அந்த நாடு தீவிர​வா​தி​களுக்கு அடைக்​கலம் அளித்து வரு​கிறது. இந்த எல்லை தாண்​டிய தீவிர​வாத பிரச்​சினையை அமெரிக்கா முழு​மை​யாக புரிந்து கொள்​ள​வில்​லை. இதன் காரண​மாக இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான உறவில் பாதிப்​பு​கள் ஏற்​பட்டு உள்​ளன.

அமெரிக்கா​வுடன் மட்​டுமே இந்​தியா நட்​புறவைப் பேண வேண்​டும் என்று ஒரு காலத்​தில் அமெரிக்க அரசு வலி​யுறுத்தி வந்​தது. ஆனால் இந்​திய அரசு அனைத்து நாடு​களு​ட​னும் சமமான நட்​புறவைப் பேணி வந்​தது. தற்​போது இந்​தி​யா​வின் கொள்​கையை அமெரிக்கா பின்​பற்​றத் தொடங்கி உள்​ளது. ஐரோப்​பிய நாடு​கள் மட்​டுமன்றி சீனா, ரஷ்யா உள்​ளிட்ட நாடு​களு​ட​னும் அமெரிக்கா நட்​புறவை ஏற்​படுத்தி உள்​ளது.

அமெரிக்​கா​வின் வரி விதிப்பு காரண​மாக இந்​தி​யா, அமெரிக்கா உறவில் பிரச்​சினை​கள் எழுந்​துள்​ளன. பல்​வேறு நாடு​களும் இதே பிரச்​சினையை எதிர்​கொண்டு உள்​ளன. இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தம் இறுதியானால் இரு நாடு​கள் இடையி​லான உறவு மேம்​படும். இவ்​வாறு அமைச்​சர்​ ஜெய்​சங்​கர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT