அலி லாரிஜானி, ஈரான் தளபதி சுலைமானி

 
உலகம்

ஈரானின் 2-வது மிகப் பெரிய தலைவர் அலி லாரிஜானி, மூத்த தளபதி சுலைமானி உயிரிழப்பு: இஸ்ரேல் பிரதமர் தகவல்

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானியும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானியும் உயி​ரிழந்​துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த பிப்.28ம் தேதி அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா காமேனி புதிய உச்ச தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். ஆனால் இஸ்​ரேல் போர் விமான தாக்​குதலில் மோஜ்தபா பலத்த காயமடைந்து கோமா​வில் இருப்​ப​தாக​ தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இந்த சூழலில் மறைந்த அயத்​துல்லா அலி காமேனி​யின் வலது கரமாக செயல்​பட்ட அலி லாரிஜானி, ஈரானை வழி நடத்தி வந்ததாகக் கூறப்​பட்​டது. இந்த சூழலில் கடந்த திங்​கள் ​கிழமை நள்​ளிரவு முதல் செவ்​வாய்க்​கிழமை அதி​காலை வரை ஈரான் தலைநகர் டெஹ்​ரானின் முக்​கிய ராணுவ தளங்​களை குறிவைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்​டு​களை வீசி தாக்குதல் நடத்​தின.

          

இது குறித்து இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு வெளியிட்ட வீடியோ​வில், “இஸ்​ரேல் வான் வழி தாக்​குதலில் அலி லாரிஜானி கொல்​லப்​பட்​டு​விட்​டார். இவர் இஸ்​லாமிய புரட்​சிகர படை​யின் தலை​வ​ராக இருந்​தார். ஈரான் ராணுவத்​தின் பசிஜ் படைத் தளபதி சுலை​மானி​யும் கொல்​லப்​பட்​டார். இந்த நேரத்​தில் ஈரானின் ஆட்​சியை பொது​மக்​கள் கைப்​பற்ற வேண்​டும்” என்றார்.

கடந்த சில நாட்​களுக்கு முன்பு டெஹ்​ரானில் நடை​பெற்ற பேரணியில் அலி லாரிஜானி பங்​கேற்​றார். அப்​போது​ முதல் அவரை தீவிர​மாக கண்​காணித்​து, அவர் தங்​கி​யிருந்த ராணுவ முகாம் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​ட​தாகவும் 300 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. அலி லாரிஜானி, சுலை​மானி​யின் உயி​ரிழப்பை ஈரான் அரசு உறுதி செய்​ய​வில்​லை.

SCROLL FOR NEXT