உலகம்

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ஈ​ரான் போரால் கடந்த 5 மாதங்​களில் மட்​டும் அமெரிக்க ராணுவத்​துக்கு ரூ.3.65 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டிருக்​கிறது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் பாதிப்​பு​கள் குறித்து அமெரிக்க நாடாளு​மன்ற பட்​ஜெட் அலு​வல​கம் (சிபிஓ) ஆய்வு நடத்தி அறிக்​கை வெளி​யிட்டு உள்​ளது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: ஈரானுக்கு எதி​ரான போரில் அமெரிக்க ராணுவம் அதிநவீன ஏவு​கணை​கள், வெடிகுண்​டு​களை பயன்​படுத்தி உள்​ளது.

உதா​ரண​மாக ஒரு குறிப்​பிட்ட தாக்​குதலுக்கு மட்​டும் 50-க்​கும் மேற்​பட்ட டோமாஹாக் ஏவு​கணை​கள் பயன்​படுத்​தப்​பட்டு உள்​ளன. ஒரு டோமாஹாக் ஏவு​கணை​யின் விலை 3.64 மில்​லியன் டாலர் (ரூ.30.6 கோடி) ஆகும். ட்ரோன்​களுக்​காக​வும், சைபர் பாது​காப்​பு, உளவு பணி​களுக்​காக​வும் பெரும் தொகை செல​விடப்​பட்டுள்ளது.

ஈரான் தாக்​குதல்​களில் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ கட்​டமைப்​பு​கள், ஆயுத கட்​டமைப்​பு​கள் அழிந்து உள்​ளன. இவற்றை சீரமைக்க பெரும் தொகை செல​விடப்​பட்டு உள்​ளன. ஈரான் போரில் சுமார் 340-க்​கும் மேற்​பட்ட அமெரிக்க போர் விமானங்​கள் ஈடு​பட்டு உள்​ளன. ஏராள​மான போர்க்​கப்​பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டு உள்​ளன. போருக்​காக புதிய ஏவு​கணை​கள், வெடிகுண்​டு​கள் கொள்​முதல் செய்​யப்​பட்டு உள்​ளன.

ஈரான் போரால் கடந்த 5 மாதங்​களில் மட்​டும் அமெரிக்க ராணுவத்​துக்கு ரூ.3.65 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரானுக்கு எதி​ரான போர் நீடித்​தால் அமெரிக்க ராணுவத்​துக்கு ஒவ்​வொரு மாத​மும் ரூ.28,767 கோடி இழப்பு ஏற்​படும்.

அமெரிக்​கா, ஈரான் போரால் பெட்​ரோல், டீசல், எரி​வாயு விலை கணிச​மாக அதி​கரித்து உள்​ளது. இதன் எதிர்​விளை​வாக அமெரிக்​கா​வில் அத்​தி​யா​வசிய பொருட்​களின் விலை உயர்ந்து வரு​கிறது. பணவீக்​கம் அதி​கரித்து வரு​கிறது. விலை​யேற்​றத்​தால் ஒவ்​வொரு அமெரிக்க குடும்​ப​மும் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. தற்​போதைய பணவீக்​கத்​தால் அமெரிக்​கா​வின் கடன் சுமை அதி​கரிக்​கும்​. இவ்​வாறு ஆய்​வறிக்​கை​யில்​ தெரிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT