உலகம்

மத்​திய கிழக்​கில் 7-வது நாளாக போர் பதற்​றம் நீடிப்பு: ட்ரம்பை கொல்ல ஈரான் மதகுரு அழைப்பு

செய்திப்பிரிவு

டெஹ்​ரான்: மத்​திய கிழக்கு நாடு​களில் 7-வது நாளாக போர் நீடித்து வரும் நிலை​யில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை கொல்ல வேண்​டும் என ஈரான் மதகுரு ஒரு​வர் அழைப்பு விடுத்​துள்​ளார்.

அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் இணைந்து கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது வான்​வழி தாக்​குதலை தொடங்​கின. இதில், ஈரான் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உட்பட சுமார் 50 உயர் அதிகாரி​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதையடுத்​து, இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைத்​தலங்​கள் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர்ந்து வான்வழி தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதற்கு இஸ்​ரேல் மற்​றும் அமெரிக்க படைகள் தக்க பதிலடி கொடுத்து வரு​கின்​றன.

          

இந்​தப் போர் இன்று ஏழாவது நாளை எட்​டியது. நேற்று அதி​காலையில் இஸ்​ரேல் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் லட்​சக்​கணக்​கான மக்​கள் குண்டு துளைக்​காத புகலிடங்களில் தஞ்​சமடைந்​தனர். இது​வரை ஈரானில் 1,230 பேர் உயி​ரிழந்​துள்​ளனர்.

இந்த சூழலில், ஈரானின் மூத்த ஷியா மதகுருக்​களில் ஒரு​வ​ரான அயத்​துல்லா அப்​துல்லா ஜவாதி அமோலி ஈரானிய அரசு தொலைக்​காட்​சி​யில் பேசும்போது, “நாம் இப்​போது ஒரு பெரிய சோதனை​யின் விளிம்​பில் இருக்​கிறோம். இந்த ஒற்​றுமையை நாம் முழு​மை​யாகப் பாது​காக்க வேண்​டும். யூதர்​களின் (இஸ்ரேலியர்கள்) ரத்​தம் சிந்​தப்பட வேண்​டும், ட்ரம்​பின் ரத்​தம் சிந்​தப்பட வேண்டும்.

அடக்​கு​முறை செய்​யும் அமெரிக்​காவை எதிர்த்​துப் போராடுங்​கள், அவனது (ட்​ரம்​பின்) ரத்​தம் என் தோள்​களில் உள்​ளது என காலத்​தின் இமாம் கூறுகிறார்” என்று தெரி​வித்​துள்​ளார்.

ஷியா இஸ்​லாமிய மதகுரு​மார்​களில் ‘அயத்​துல்​லா’ என்​பது மிக உயர்ந்த பதவி​களில் ஒன்​றாகும். ஈரானில் இத்​தகைய மூத்த மதகுருக்​கள் பலர் உள்​ளனர். அவர்​களின் மத மற்​றும் அரசி​யல் ரீதியி​லான கருத்​துகள் குறிப்​பிடத்​தக்க தாக்​கத்தை ஏற்​படுத்​தும்.

எனவே, இந்த அறிக்கை மிக முக்​கிய​மான​தாகக் கருதப்​படு​கிறது. அமெரிக்க செனட் ஒப்​புதல் இதற்​கிடையே ஈரானுக்கு எதி​ரான வான்​வழித் தாக்​குதல்​களை நிறுத்​து​வதற்​கான தீர்​மானம் அமெரிக்க செனட்​டில் தோற்​கடிக்​கப்​பட்​டது (53-47 வாக்​கு​கள்). இதன் மூலம் தாக்​குதலைத் தொடர அதிபர்​ ட்ரம்​புக்​கு அதி​காரம்​ கிடைத்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT