மோஜ்தபா காமேனி
டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை நடத்திய தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா காமேனி (56), புதிய உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதில் அவரும் காயமடைந்தார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அவர் தீவிர காயமடைந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரது உடல், முகம் ஆகியவை உருக்குலையும் வகையில் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாக அங்கிருந்து வரும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், அவர் மனதளவில் திடமாக இருப்பதாகவும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. போர், பேச்சுவார்த்தை, போர் நிறுத்தம் தொடர்பான விஷயங்களை அவரிடம் பகிர்ந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம் மோஜ்தபா காமேனி எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை எப்படி இருக்கிறது. அவருடைய உண்மையான நிலை என்ன, அவருக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன என்பது தொடர்பாக இதுவரை ஈரான் வெளிப்படையாக எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘‘அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் மோஜ்தபா தனது காலை இழந்துவிட்டார்’’ என்று தெரிவித்துள்ளன.