உலகம்

அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருவதால, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.

ஈரானில் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (88) தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.

          

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்​டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, குவாம், கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. தெஹ்ரானில் உள்ள கமேனியின் வீடு, அலுவலகம், ராணுவ அலுவலகம், உளவுத் துறை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் சில குண்டுகள் விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரான் பதில் தாக்குதல்:

அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்கள் மற்றும் வடக்கு, மத்திய, தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது.

ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.

சவுதி கண்​டனம்

ஈரான் ஏவு​கணை தாக்​குதலுக்கு கண்​டனம் தெரி​வித்​துள்ள சவுதி அரேபி​யா, ‘ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்​தார், குவைத் மற்​றும் ஜோர்​டான் மீது ஈரான் நடத்​திய தாக்​குதல் இறை​யாண்மை விதி​மீறல். இந்த தாக்​குதல் தொடர்ந்​தால் ஈரான் கடும் விளைவு​களை சந்திக்க நேரிடும்’ என தெரி​வித்​துள்​ளது.

வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தொடர் தாக்​குதல் நடத்​தி​னால், வளை​குடா நாடு​கள்​ ஒன்​றிணைந்​து ஈரான்​ மீது தாக்​குதல்​ நடத்​தும்​ அபாய​மும்​ எழுந்​துள்​ளது.

புர்ஜ் கலீஃபா கட்டிடம்

ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக அமீரகத்தின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் 900-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகள் உள்ளன. ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் நேற்றிரவு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வளைகுடா நாடுகளில் பதற்றம்

அமெரிக்க கடற்​படை​யின் 5-வது படைப் பிரிவு பஹ்ரைனில் உள்​ளது. இதனால் பஹ்ரைன் மீது ஈரான் நேற்று ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) அபு​தாபி​யில் உள்ள அல் தர்பா விமானப் படை தளத்தை யுஏஇ விமானப் படை மற்​றும் அமெரிக்க விமானப் படை ஆகியவை பகிர்ந்​துள்​ளன. இதனால் யுஏஇ நோக்​கி​யும் ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது.

துபா​யின் ஜெபல் அலி துறை​முகத்​தில் அமெரிக்க கடற்​படை முகாம் உள்​ளது. மத்​திய கிழக்கு பகு​திக்கு செல்​லும் அமெரிக்க போர்க் கப்​பல்​களுக்கு இங்​கு​தான் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்​களும் விநி​யோகம் செய்​யப்​படு​கின்​றன. அதனால் துபாய் மீது ஈரான் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது.

கத்​தார் நாட்​டின் தோஹா நகரில் உள்ள அல் உதித் விமானப் படை தளத்​தில் அமெரிக்க விமானப் படை​யின் மத்​திய கட்​டுப்​பாட்டு தலை​மையகம் உள்​ளது. இதனால் தோஹா மீதும் ஈரான் ஏவு​கணை​களை வீசி​யது.

சவுதி அரேபி​யா​வில் அமெரிக்க ராணுவ வீரர்​கள் 2,000 பேர் முகாமிட்​டுள்​ளனர். இதனால் ரியாத் நோக்கி ஈரான் ஏவு​கணை​கள் பாய்ந்தன. ஈரான் ஏவு​கணை​கள், துபாய், தோகா, ரியாத் ஆகிய நகரங்​களில் விழுந்து வெடித்​த​தால் மத்​திய கிழக்கு நாடு​களில்​ பதற்​றம்​ ஏற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT