உலகம்

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நிர்வகித்த ஈரான் தளபதி அலிரேசா உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தியை நிர்​வகித்த ஈரான் கடற்​படைத் தளபதி அலிரேசா, இஸ்​ரேல் விமானப் படை தாக்​குதலில் உயிரிழந்​தார்.

அமெரிக்​கா - ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடி​யிருக்​கிறது. இதனால், உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய், எல்​பிஜி காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது.

          

ஈரான் கடற்​படை​ தளபதி அலிரேசா டாங்​கிரி, ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யின் பொறுப்​பாள​ராக செயல்​பட்டு வந்​தார். சர்​வ​தேச கடல் போக்​கு​வரத்தை தடுத்து நிறுத்​திய குற்​றத்​துக்​காக அவரை சர்​வ​தேச தீவிர​வா​தி​யாக அமெரிக்க அரசு அறி​வித்​திருந்​தது. இந்த சூழலில், ஈரானின் பந்​தர் அப்​பாஸ் துறை​முக நகரின் பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டு​களை வீசின.

இதில், அலிரேசா டாங்​கிரி உயி​ரிழந்​தார். ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்தை முடக்​கியதற்​காக அவர் கொலை செய்​யப்பட்​டார் என இஸ்​ரேல் ராணுவம் தெரி​வித்​துள்​ளது. எனினும், அவரது உயி​ரிழப்பை ஈரான் ராணுவம் உறு​தி​செய்​ய​வில்​லை.

SCROLL FOR NEXT