உலகம்

நடிகர் பாலய்யா வீடியோவை பதிவிட்டு ட்ரம்பை கிண்​டல் செய்த ஈரான்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஈரான் ​ -அமெரிக்கா இடையே கடந்த 6 மாதங்களாக மோதல் தொடர்ந்து நீடிக்​கிறது. இந்​தப் போர் வான்​வழித் தாக்குதல்​களால் மட்​டுமின்றி சமூக வலைத்தள பதிவு​களாலும் தீவிர மடைந்து வரு​கிறது.

ஈரான், அமெரிக்கா​வின் கட்டுப்பாட்டில் இருப்​பது போல ஏஐ மூலம் உரு​வாக்​கப்​பட்ட புகைப்​படங்​கள், வீடியோக்​களை அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளி​யிட்டு வரு​கிறார். அதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக ஈரான் அண்​மைக் காலமாக இந்​திய திரைப்​படங்​களின் காட்​சிகளைப் பயன்​படுத்தி ட்ரம்பை கிண்​டல் செய்து வரு​கிறது. சமீபத்​தில் பாலிவுட் நடிகர் அக் ஷய் குமாரின் வைரல் மீம் ஒன்றை பயன்​படுத்தி ட்ரம்ப்பை கேலி செய்​தது.

இந்​நிலை​யில் ஜிம்பாப்வே​வில் உள்ள ஈரான் தூதரகம், தெலுங்கு நடிகர் நந்​தமுரி பால​கிருஷ்ணா​வின் (பாலய்​யா) சண்​டைக் காட்சியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து ட்ரம்ப்பை கிண்​டல் செய்துள்ளது.

2023-ம் ஆண்டு வெளி​யான `பகவந்த் கேசரி' திரைப்​படத்​தின் 58 வினாடி அதிரடி காட்​சியை எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​தது. அதில், நடிகர் பால​கிருஷ்ணா ஒரே சமயத்​தில் தன்னை நோக்கி வரும் ஏராள​மான துப்​பாக்கி குண்​டு​களை பாதாள சாக்​கடை​யின் மூடியை வைத்தே தடுக்​கும் காட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன.

அந்த வீடியோவுடன், “ட்​ரம்ப் ஈரானை அழித்​து​விடு​வ​தாக பேசுகிறார். ஆனால் ஈரான் தன்​னைத் தற்​காத்​துக் கொள்ள முடியாத நாடு அல்ல என்​பதை அவர் அறி​வார்” என குறிப்பிடப்பட்டுள்​ளது.

மேலும், “ட்​ரம்ப் மற்​றும் அவரது நிர்​வாகம் சமீபத்​தில் ஹாலிவுட் படங்​களை விட பாலிவுட் படங்​களையே பார்த்து வரு​கிறார்​கள்” என்​றும் பதி​வில் நகைச்​சுவை​யாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

SCROLL FOR NEXT