உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் 3 கப்பல் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே​யான 2 வார கால இடைக்​கால போர் நிறுத்​தம் நேற்​றுடன் முடிந்​தது. இந்​நிலை​யில், கால​வரை​யின்றி சண்டை நிறுத்தத்தை நீட்​டிப்​ப​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறி​வித்​தார். ஆனால், ஈரான் எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை.

இந்​நிலை​யில், ஈரான் சரக்​குக் கப்​பல்​கள் சில​வற்றை அமெரிக்கா துப்​பாக்​கிச் சூடு நடத்தி சிறைபிடித்​துள்​ளது. மேலும், ஈரான் துறை​முகங்​களை தொடர்ந்து முற்​றுகை நிலை​யில் வைத்​திருக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்​டுள்​ளார். இதனால் ஈரானின் கச்சா எண்​ணெய் விற்​பனை வரு​வாய் முடங்​கி​யுள்​ளது.

அமெரிக்​கா​வின் நெருக்​கடிக்கு பதிலடி அளிக்​கும் வகை​யில், ஹார்​முஸ் ஜலசந்தி பகு​தி​யைக் கடக்க முயன்ற 3 சரக்​குக் கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது. இத்​தகவலை சரக்​குக் கப்​பல் போக்​கு​வரத்​தைக் கண்​காணிக்​கும் இங்​கிலாந்​தின் யுகேம்​டிஓ மையம் தெரி​வித்​துள்​ளது.

இதில் ஒரு சரக்​குக் கப்​பல் சேதம் அடைந்​துள்​ளது. ஆனால், ஊழியர்​களுக்கு எந்த பாதிப்​பும் ஏற்​பட​வில்​லை. இந்​தத் தாக்​குதல் மூலம் ஹார்​முஸ் ஜலசந்தி தொடர்ந்து தங்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது. தங்​கள் அனு​ம​தி​யின்றி எந்​தக் கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து செல்ல முடி​யாது என ஈரான் ராணுவம் எச்​சரித்​துள்​ளது.

இந்​தி​யக் கப்​பல்: முன்​ன​தாக ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கடந்த 18-ம் தேதி இந்​தி​யக் கொடி​யுடன் வந்த 2 கப்​பல்​கள் மீது ஈரான் ராணுவம் துப்​பாக்​கிச் சூடு நடத்​தி​யது. இந்​தி​யா​வின் கண்​டனத்தை தொடர்ந்து இந்த தாக்​குதல் தற்​செய​லானது என ஈரான் விளக்​கம் அளித்​தது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் இந்​தி​யக் கொடி ஏந்​திய மேலும் 14 கப்​பல்​கள் சிக்​கி​யுள்​ளன. இந்​தக் கப்​பல்​களை பத்​திர​மாக வெளி​யேற்ற மத்​திய அரசு முயன்று வரு​கிறது. இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்தி அரு​கில் 2 கப்​பல்​களைக் ஈரான் நேற்று கைப்​பற்​றியது.

அந்​தக் கப்​பல்​கள் ஈரானின் ஐஆர்​ஜிசி கடற்​படை​யின் கட்​டுப்​பாட்​டில் இருப்​ப​தாக​வும், அவை ஈரானுக்கு கொண்டு செல்​லப்​படு​வ​தாக​வும் ஈரானிய அரசுத் தொலைக்​காட்சி பின்​னர் செய்தி வெளி​யிட்​டது.

அந்​தக் கப்​பல்​கள் எம்​எஸ்சி பிரான்​செஸ்கா மற்​றும் எபமினோண்​டாஸ் என அடையாளம் காணப்​பட்​டுள்​ளன. கடல் போக்​கு​வரத்து தரவு​களின்​படி, லைபீரியக் கொடி​யுடன் கூடிய டேங்​கர் கப்​பலான எபமினோண்​டாஸ், குஜ​ராத்​தின் கட்ச் மாவட்​டத்​தில் உள்ள முந்த்ரா துறை​முகம் நோக்கி வந்து கொண்​டிருந்​த​தாக தெரி​கிறது. மற்​றொரு கப்​பல்​ இலங்​கை நோக்​கி சென்​ற​தாகத்​ தகவல்​கள்​ வெளி​யாகி உள்​ளன.

SCROLL FOR NEXT