உலகம்

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் இந்திய பெருங்கடலுக்கும் போர் பரவும்: ஈரான் ஆலோசகர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரான் மீது அமெரிக்கா மீண்​டும் ராணுவ தாக்​குதலைத் தொடுத்​தால் இந்​தி​யப் பெருங்​கடல் வரை போர் எல்லை விரிவடை​யும் என்று அந்​நாட்டு உச்ச தலை​வரின் மூத்த ஆலோ​சகர் யாஹ்யா ரஹீம் சஃபாவி எச்​சரித்​துள்​ளார்.

இதுகுறித்து ஈரானின் ‘ஃபார்​ஸ்’ செய்தி நிறு​வனம் வெளி​யிட்​டுள்ள வீடியோ பதி​வில் சஃபாவி பேசும்​போது, “ஈரான்​-அமெரிக்கா இடையே​யான போர் ஏற்​கெனவே பாரசீக வளை​குடா மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தியி​லிருந்து செங்​கடலுக்கு பரவி​யுள்​ளது.

இந்த நிலை​யில், அமெரிக்கா மேலும் தாக்​குதலைத் தொடர்ந்​தால் அதற்கு பதிலடி கொடுக்​கும் வித​மாக, இந்​தப் போரின் எல்லை மேலும் விரிவடைந்து இந்​தி​யப் பெருங்​கடலை​யும், அதற்கு அப்​பாலும் சென்​றடையக் கூடும்” என்​றார்.

முன்​ன​தாக, அமெரிக்கா மீண்​டும் தாக்​குதலைத் தொடர்ந்​தால் ராணுவ உத்​தி​களை​யும் இலக்​கு​களை​யும் மாற்​று​வோம் என்று ஈரானிய புரட்​சிகரக் காவல்​படை தலை​வர் கூறி​யிருந்​தார். பாரசீக வளை​கு​டா, ஓமன் வளை​குடா மற்​றும் முக்​கிய கடல்​சார் வர்த்​தகப் பாதைகளில் பதற்​றம் அதி​கரித்து வரும் நிலை​யில் இந்த எச்​சரிக்​கை வெளி​யாகி​யுள்​ளது.

SCROLL FOR NEXT