உலகம்

அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அந்த நாட்​டில் அமெரிக்​கா​வின் ராணுவ தளம் இல்​லை. ஆனால் அமெரிக்​கா​வின் நெருங்​கிய நட்பு நாடாக அஜர்​பைஜைன் செயல்​படு​வ​தால் ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இதற்கு தகுந்த பதிலடி தரு​வோம் என்று அஜர்​பைஜான் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

கத்​தார் தலைநகர் தோஹா​வில் உள்ள அமெரிக்க விமானப்​படைத் தளத்தை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது. ஐக்​கிய அரபு அமீரக தலைநகர் அபு​தாபி மற்​றும் இஸ்​ரேலின் பல்​வேறு பகு​தி​களை குறி​வைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை​களை வீசி​யது.

          

இஸ்​ரேல் ராணுவ வட்​டாரங்​கள் கூறும்​போது, “அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்​துக்கு இடையி​லான போர் தீவிரமடைந்​துள்​ளது. ஈரானில் உள்ள குர்து கிளர்ச்​சிப் படைகளுக்கு ஆயுதங்​களை வழங்க அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது.

இதன்​மூலம் ஈரானுக்கு எதி​ரான போர் தீவிரமடை​யும். ஈரானில் ஆட்சி மாற்​றம் ஏற்​படும்​வரை தொடர்ந்து தாக்​குதல் நடத்​து​வோம். 2 வாரங்​கள் வரை போர் நீடிக்​கக்​கூடும்​" என்​று தெரி​வித்​தன.

SCROLL FOR NEXT