ஈரானில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்கள்

 
உலகம்

வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற ஈரான் அனுமதி

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்கா​வும் இஸ்​ரேலும் வான்​வழி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றன.

இதற்கு பதிலடி​யாக இஸ்​ரேல் மற்​றும் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க தளங்​கள் மீது ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இதனால் மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் போர் பதற்​றம் உச்​சகட்​டத்தை எட்​டி​யுள்​ளது. இந்​நிலை​யில் ஈரான் கல்வி நிலை​யங்​களில் படிக்​கும் வெளி​நாட்டு மாணவர்​கள் நில எல்​லைகள் வழி​யாக வெளி​யேற அனு​ம​திக்​கப்​படு​வார்​கள் என ஈரான் அரசு அறி​வித்​துள்​ளது.

          

மேலும், மாணவர்​கள் தங்​கள் பருவ இறு​தித் தேர்​வு​களை பின்​னர் எழுத​வும், முனை​வர் பட்ட ஆய்​வறிக்​கையை பின்​னர் சமர்ப்பிக்கவும் அனு​ம​திக்​கப்​படு​வார்​கள், அதற்​கான தேதி​கள் பிறகு அறிவிக்​கப்​படும் என்​றும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஈரானில் பல்​கலைக்​கழகங்​கள் மற்​றும் பொது நிறு​வனங்​கள் தற்காலிகமாக மூடப்​பட்​டுள்​ளன. ஈரான் வான்​வெளி சர்​வ​தேச விமானங்​களுக்கு மூடப்​பட்​டுள்​ளது.

ஈரானை விட்டு வெளி​யேறு​மாறு இந்​திய மாணவர்​களை அங்குள்ள இந்​திய தூதரகம் தொடர்ந்து கேட்​டுக்​கொண்​டது. எனினும் வான்​வெளி மூடப்​பட்​டது உள்​ளிட்ட பிற சவால்​கள் வெளியேறும் முயற்​சியை சிக்​கலாக்​கி​யுள்​ளன. டெஹ்​ரான், உர்மியா மற்​றும் பிற பிராந்​தி​யங்​களில் உள்ள மாணவர்​களுக்கு மருத்​து​வம் உள்​ளிட்ட அத்​தி​யா​வசிய சேவை​கள் பெறு​வ​தில் சிரமம் எற்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT