உலகம்

கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் மது குடித்ததாக புகார்: ஏர் இந்தியா பைலட்டிடம் தீவிர விசாரணை

செய்திப்பிரிவு

வான்கூவர்: ஏர் இந்​தியா விமானம் ஒன்று கடந்த டிசம்​பர் 23-ம் தேதி கனடா​வின் வான்​கூவர் நகரிலிருந்து டெல்​லிக்கு புறப்பட தயா​ராக இருந்​தது.

ஏர் இந்​தியா விமான பைலட் மது பாட்​டில் வாங்​கும்​போது அவர் மீது மது வாடை வீசி​யதையோ அல்​லது ஒயின் அருந்​தி​யதையோ கவனித்த வான்​கூவர் விமான நிலைய ஊழியர் ஒரு​வர், உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​துள்​ளார். இதையடுத்​து, பைலட்டுக்கு மூச்சு பகுப்​பாய்வு சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. அதில் அவர் மது அருந்​தி​யது உறு​தி​யாகி உள்​ளது.

இதையடுத்​து, அவரை தடுப்​புக் காவலில் வைத்து விசா​ரணை நடத்தி உள்​ளனர். விமானம் ஓட்​டு​வதற்​கான தகு​தியை பைலட் இழந்​து​விட்​ட​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இதனால் விமானம் புறப்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ளது. இது குறித்து தகவல் அறிந்த ஏர் இந்​தியா நிர்​வாகம், அவரை பணியி​லிருந்து தற்​காலிக​மாக விடு​வித்​ததுடன் வேறு ஒரு பைலட்டை பணி​யில் ஈடு​படுத்தி விமானத்தை அனுப்பி வைத்​துள்​ளது.

இதனால் அந்த விமானம் சுமார் 2 மணி நேரம் தாமத​மான​தாகக் கூறப்​படு​கிறது. இந்த தகவல் இப்​போது வெளி​யாகி உள்​ளது. இந்த சம்​பவம் நடந்த சில தினங்​களுக்​குப் பிறகு, அந்த பைலட் டெல்லி திரும்​பி​னார். அவரிடம் ஏர் இந்​தியா நிர்​வாகம் விசா​ரணை நடத்தி வரு​கிறது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், “விதிமுறைகள் மற்றும் சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் ஏர் இந்தியா சகித்துக் கொள்ளாது. பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முதல் முன்னுரிமை வழங்குகிறோம். பைலட் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT