உலகம்

ட்ரம்பிடம் போனில் பேச மோடி மறுத்ததால் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் முடக்கம்

அமெரிக்க அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தகவல்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: ரஷ்​யா​விடம் இருந்து இந்தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால் இந்​திய பொருட்​களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்து வரு​கிறது.

வரி விதிப்பு தொடர்​பாக இருநாடு​களின் மூத்த அதி​காரி​கள் பல்​வேறு சுற்று பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தினர். இதுகுறித்து அமெரிக்க வர்த்தக அமைச்​சர் ஹோவர்ட் லுட்​னிக் கூறியதாவது: இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் இறுதி செய்​யப்​பட்டு விட்​டது. வர்த்தக ஒப்​பந்​தம் தொடர்​பாக அதிபர் ட்ரம்​பை, பிரதமர் மோடி தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசு​மாறு அறி​வுறுத்​தினேன். ஆனால் எனது கோரிக்​கையை இந்​திய குழு​வினர் ஏற்​க​வில்​லை. அதிபர் ட்ரம்​பிடம், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி போனில் பேச மறுத்​த​தால் இரு நாடு​கள் இடையி​லான வர்த்தக ஒப்​பந்​தம் முடங்​கி​யிருக்​கிறது.

எனினும் இந்​தோ​னேசி​யா, பிலிப்​பைன்​ஸ், வியட்​நாம், மலேசியா உள்​ளிட்ட நாடு​களின் தலை​வர்​கள் அதிபர் ட்ரம்பை தொலைபேசி​யில் தொடர்பு கொண்டு பேசினர். அந்த நாடு​களு​டன் வர்த்தக ஒப்​பந்​தம் அதி​காரப்​பூர்​வ​மாக கையெழுத்​தாகி​விட்​டது.

மூன்று வாரங்​களுக்கு பிறகு இந்​திய அதி​காரி​கள் என்னை தொடர்பு கொண்டனர். அப்போது “3 வாரங்​களுக்கு முன்பே ரயில் புறப்​பட்டு சென்​று​விட்​டது. இனிமேல் என்​னால் ஒன்​றும் செய்ய முடி​யாது” என்று தெளி​வாக கூறி​விட்​டேன். இதே பிரச்சினையின் போது பிரிட்​டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்​மர், அதிபர் ட்ரம்பை தொடர்பு கொண்டு ஒப்​பந்​தத்தை இறுதி செய்​து​விட்​டார். இவ்​வாறு​ லுட்​னிக்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT