உலகம்

பாகிஸ்தானில் இந்து இளைஞர் சுட்டுக் கொலை: சிந்து பகுதியில் அரசியல் கட்சியினர் போராட்டம்

செய்திப்பிரிவு

கராச்சி: பாகிஸ்​தானின் சிந்து மாகாணத்​தில் உள்ள பதின் பகு​தி​யில் உள்ள ரகோ கோல்ஹி கிராமத்​தில் கைலாஷ் கோலி என்ற இந்து இளைஞர் வசித்து வந்​தார்.

ஏழை விவ​சா​யி​யான இவர், சர்ஃபரஸ் நிசாமணி என்​பவரது நிலத்தில் குடிசை வீடு கட்​டி​னார். இதற்​காக சர்ஃபரஸ் நிசாமணி, கைலாஷ் கோலியை சுட்​டுக் கொன்​றார். இவர் இப்​பகு​தி​யில் செல்​வாக்​குமிக்க நில உரிமை​யாளர்.

இந்த சம்​பவத்தை கண்​டித்து கைலாஷ் கோலி குடும்​பத்​தினர் மற்​றும் அங்​குள்ள இந்​துக்​கள் அவரது உடலை சாலையில் வைத்து போராட்​டம் நடத்​தினர். அப்​போது குற்​ற​வாளியை 24 மணி நேரத்​தில் கைது செய்​வ​தாக பதின் நகர போலீஸ் அதி​காரி உறு​தி​யளித்​தார். ஆனால் 4 நாட்​களாகி​யும் குற்​ற​வாளி கைது செய்​யப்​பட​வில்​லை.

இதனால் இச்​சம்​பவத்தை கண்​டித்து பாகிஸ்​தான் சிந்து பகு​தி​யில் மிகப் பெரியள​வில் போராட்​டம் நடை​பெறுகிறது. இதில் அரசி​யல் கட்சி தலை​வர்​கள், தொண்​டர்​கள், ஜமி​யத் உலமா - இ-இஸ்​லாம், பாகிஸ்​தான் தெக்​ரிக் -இ-இன்​சாப் கட்​சி, ஜியோ சிந்து மகாஷ், குவாமி அவாமி தெக்​ரிக், ஜியோ சிந்து குவாமி மகஷ், அவாமி தெக்​ரீக் போன்ற சமூக அமைப்​பு​களும் பங்​கேற்​றன.

இதுகுறித்து பாகிஸ்​தான் தராவர் இதி​காட் அமைப்​பின் தலை​வர் சிவா கச்சி எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கைலாஷ் கோலியை கொலை செய்​தவர்​களை கைது செய்​யக்​கோரி நடை​பெறும் போராட்டம் வரலாறு படைத்து வரு​கிறது. இது போராட்​டம் மட்​டும் அல்ல. காயமடைந்த மனசாட்​சி​யின் குரல்.

நீதி கோரி நாங்​கள் நடத்​தும் போராட்​டத்தை அடக்க முடி​யாது. இதில் ஆண்​கள், பெண்​கள், முதி​ய​வர்​கள், அப்​பாவி குழந்​தைகள் தெரு​வில் அமர்ந்து கைலாஷ் கோலிக்கு நீதி கோரி குரல் எழுப்​பினர். ஏழை​யாக இருந்​தது​தான் கைலாஷ் கோலி​யின்​ ஒரே குற்​றம்​. ஏழை​யின்​ ரத்​தம்​ மலி​வான​தா? இவ்​​வாறு சி​வா கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT