உலகம்

இஸ்ரேல் பிரதமர் ஆகிறார் காடி ஐசன்கோட்: புதிய கூட்டணி அரசில் நெதன்யாகு கட்சியை இணைக்க தீவிர முயற்சி

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்​சாக் அழைப்பு விடுத்​துள்​ளார்.

கடந்த அக்​டோபர் 27-ம் தேதி இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தமுள்ள 120 தொகுதி​களில் ஆட்​சி​யமைக்க 61 இடங்​களைக் கைப்​பற்ற வேண்​டும். இந்த தேர்​தலில் ஒட்​டுமொத்​த​மாக ஆளும் லிகுட் கூட்​ட​ணிக்கு 53 இடங்​கள் கிடைத்​தன. ஒட்​டுமொத்​த​மாக டுகெதர் கூட்​ட​ணிக்கு 48 இடங்​கள் கிடைத்​தன. இஸ்ரேலை சேர்ந்த அரபு கட்​சிகளின் கூட்​ட​ணி​யான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்​களை​யும் மற்​றொரு அரபு கூட்​ட​ணி​யான ராஆம் 8 இடங்​களை​யும் கைப்​பற்​றின.

இஸ்​ரேல் நாடாளு​மன்ற தேர்​தலில் எந்​தக் கூட்​ட​ணிக்​கும் பெரும்​பான்மை கிடைக்​காத சூழலில் யஷார் கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் ஆட்சி அமைக்க அந்த நாட்டு அதிபர் ஐசக் ஹெர்​சாக் நேற்று முன்​தினம் அதி​காரப்​பூர்​வ​மாக அழைப்பு விடுத்​தார். அடுத்த 6 வாரங்​களுக்​குள் ஆட்சி அமைத்து பெரும்​பான்​மையை நிரூபிக்கவும் அறி​வுறுத்தி உள்​ளார்.

இந்த சூழலில் காடி ஐசன்​கோட் கூறிய​தாவது: நாம் இப்​போது அவசரகால சூழலில் உள்​ளோம். இதை புரிந்து கொண்டு எங்​களது கூட்​டணி அரசில் லிகுட் கட்சி மற்​றும் ஆளும் கூட்​டணி கட்​சிகள் இணை​ய​ அழைப்பு விடுக்​கிறேன். நாம் ஒன்​றிணைந்து தேசிய எமர்​ஜென்சி அரசை அமைக்​கலாம். ஆனால் என்னை பிரதம​ராக ஏற்​றுக் கொள்​ளும் கட்​சிகள் மட்​டுமே கூட்​ட​ணி​யில் இணைக்​கப்​படும்.

எங்​கள் கூட்​ட​ணி​யின் 4 முக்​கிய நிபந்​தனைகளை​யும் ஏற்​றுக் கொள்ள வேண்​டும். அதாவது இஸ்ரேலை யூத ஜனநாயக நாடாக அங்​கீகரித்து ஏற்​றுக் கொள்ள வேண்​டும். இஸ்ரேலின் 1948-ம் ஆண்டு சுதந்​திர தின அறி​விப்பை ஏற்​றுக் கொள்ள வேண்​டும். அனைத்து தரப்​பினரும் கட்​டாய​மாக ராணுவ பயிற்சி பெற வேண்​டும். ஹமாஸ் அமைப்பை தீவிர​வாத குழு​வாக அறி​விக்க வேண்​டும். இந்த 4 நிபந்​தனைகளை ஏற்​றுக் கொண்​டால் மட்​டுமே எங்​கள் கூட்​ட​ணி​யில் இணை​ய​லாம். இவ்​வாறு காடி ஐசன்​கோட் தெரி​வித்​துள்​ளார்.

ஜாயின்ட் லிஸ்ட் மற்​றும் ராஆம் ஆகிய இரு அரபு கூட்​ட​ணிகள், காடி ஜசன்​கோட்​டின் கூட்​டணி அரசில் இணை​யாமல் வெளி​யில் இருந்து ஆதரவு அளிக்க முடிவு செய்​துள்​ளன. எனினும் அரபு கூட்​ட​ணிகளின் ஆதரவு இன்றி பிரதமர் நெதன்​யாகு​வின் லிகுட் கட்சி மற்​றும் அதன் கூட்​டணி கட்​சிகளை புதிய அரசில் இணைக்க காடி ஐசன்​கோட் தீவிர முயற்சி செய்து வரு​கிறார்.

இந்​தி​யாவின் தீவிர ஆதர​வாளர்: இஸ்ரேலின் புதிய பிரதம​ராக பத​வி​யேற்க உள்ள காடி ஐசன்​கோட் கடந்த 2015 முதல் 2019 வரை அந்த நாட்​டின் ராணுவ தளப​தி​யாகப் பதவி வகித்​தார். அப்​போது (2017-ல்) அன்​றைய இந்​திய கடற்​படை தளபதி சுனில் லம்பா இஸ்ரேலில் அரசு முறை பயணம் மேற்​கொண்​டார். அன்​றைய இஸ்​ரேல் ராணுவ தளபதி காடி ஐசன்​கோட்டை அவர் சந்​தித்து முக்​கிய பேச்சு​வார்த்தை நடத்​தினார். குறிப்​பாக இந்​தி​யா​வுக்கு தேவை​யான ஆயுதங்​கள், ராணுவ தொழில்​நுட்​பங்​களை வழங்​கு​வது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இந்​தி​யாவின் தீவிர ஆதர​வாளரான காடி ஐசன்​கோட், இந்​திய ராணுவத்​துக்கு தேவை​யான ஆயுத, தொழில்​நுட்ப உதவி​களை வழங்க விரைந்து நட​வடிக்கை எடுத்​தார். இதன்​பிறகே இந்​தி​யா​வும் இஸ்ரேலும் இணைந்து அதிநவீன பராக் 8 ஏவு​கணைகளை தயாரிக்க தொடங்​கின. ஐசன்​கோட்​டின் பதவி காலத்​தில் இரு நாடுகள் இடையே 200 கோடி டாலர் மதிப்​பிலான பாது​காப்பு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT