உலகம்

உக்​ரைன் போரை நிறுத்​த புதினிடம் வலி​யுறுத்த வேண்டும்: சீன அதிபரை சந்தித்த பிரான்ஸ் அதிபர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

பீஜிங்: உக்​ரைனுடன் போர் நிறுத்​தம் செய்ய ரஷ்​யாவை சீனா வலி​யுறுத்த வேண்​டும் என சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கிடம், பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் வேண்​டு​கோள் விடுத்துள்​ளார்.

சீனா​வுக்கு 3 நாள் அரசு முறைப் பயண​மாக பிரான்ஸ் அதிபர் இம்​மானுவேல் மேக்​ரான் சென்​றுள்​ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்​பிங்கை நேற்று சந்​தித்​தார். அதன்​பின் மேக்​ரான் அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: சர்​வ​தேச ஒழுங்கு முறை காரண​மாக பல ஆண்​டு​களாக உலகில் அமைதி நிலவி வந்​தது. அந்த ஒழுங்கு சிதை​யும் அபா​யம் தற்​போது ஏற்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் சீனா - பிரான்ஸ் இடையே​யான பேச்​சு​வார்த்தை மிக முக்​கிய​மானது. உக்​ரைனின் முக்​கிய கட்​டமைப்​பு​களை குறி​வைத்து ரஷ்யா தாக்​குதல் நடத்தி வரு​கிறது. அதனால் கூடிய விரை​வில் இரு நாடு​கள் இடையே போர் நிறுத்​தம் ஏற்பட நாம் முயற்​சிகள் மேற்​கொள்ள வேண்​டும். எங்​களின் முயற்​சி​யில் சீனா இணை​யும் என நம்​பு​கிறேன். இவ்​வாறு மேக்​ரான் கூறி​னார்.

சீன அதிபர் ஜி ஜின்​பிங் அளித்த பேட்​டி​யில்,"அமை​தியை நோக்கிய அனைத்து முயற்​சிகளை​யும் சீனா ஆதரிக்​கிறது. அனைத்து தரப்​பினரும் ஏற்​கும்​படி​யான அமைதி ஒப்​பந்​தம் ஏற்பட வேண்​டும். காசா​வின் மீட்பு பணிக்கு சீனா 100 மில்​லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்​க​வுள்​ளது. ஏரோஸ்​பேஸ், ஏரோ​னாடிக்​ஸ், அணு சக்​தி, பசுமை தொழில்​கள் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு ஆகிய துறை​களில் இரு நாடு​களும் அதிக ஒத்​துழைப்​புடன் செயல்​பட ஒப்​புக்​ கொண்டுள்ளோம்" என்றார்.

SCROLL FOR NEXT