கலீதா ஜியா
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
80 வயதாகும் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது, கார்பன் டை ஆக்ஸைடு அளவு உயர்ந்தது. இதையடுத்து நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துள்ளதால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்படுகிறது. ரத்தமும் ஏற்ற வேண்டியுள்ளது. அவருக்கு இருதயக் குழாயிலும் பிரச்சினை உள்ளது. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்ததாக அவரது குடும்ப மருத்துவர் ஜாகித் ஹொசைன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, “அவர் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது. தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கான சிகிச்சையை தொடர்ந்து அளித்து வருகிறோம்” என்றார்.