உலகம்

பறக்கும் ‘டெஸ்லா ரோட்ஸ்டர் 2' காரை அறிமுகப்படுத்தினார் எலான் மஸ்க்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: பறக்​கும் ‘டெஸ்லா ரோட்​ஸ்​டர் 2’ காரை தொழிலதிபர் எலான் மஸ்க் அறி​முகப்​படுத்​தி​யுள்​ளார். பறக்​கும் காரை தயாரிக்க உள்​ள​தாக டெஸ்லா நிறுவனத் தலை​வர் எலான் மஸ்க் ஏற்​கெனவே அறி​வித்​திருந்​தார்.

இந்த நிலை​யில், பல ஆண்டு கால தீவிர ஆராய்​சிக்​குப் பிறகு ‘ரோட்​ஸ்​டர் 2’ மின்​சா​ரக் காரை மஸ்க் நேற்று முன்​தினம் அறி​முகப்​படுத்​தி​னார். இது​வரை அறி​வியல் புனைக் கதை திரைப்படங்​களில் மட்​டுமே சாத்​தி​ய​மாக இருந்த ஒரு விஷயத்தை எலான் மஸ்க் இந்த கார் அறி​முகத்​தின் மூலம் நிஜ​மாக்கி காட்டியுள்​ளார்.

டெக்​சாஸில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் ராக்​கெட் மேம்​பாடு மற்​றும் சோதனை மையத்​தில் நடை​பெற்ற இதற்​கான அறி​முக நிகழ்​வில், மிகப்​பெரிய வளைந்த பாதை​யில் தலைகீழாகப் பயணித்த இந்த மின்​சா​ரக் கார், காற்​றில் தலைகீழாகச் சுழன்று சில வினாடிகள் ஆகா​யத்​தில் மிதந்​த​வாறே தரை இறங்​கியது.

கார் பாதுகாப்பாகத் தரை​யிறங்​கியதும் பேசத் தொடங்​கிய டெஸ்லா தலைமை நிர்​வாக அதி​காரி எலான் மஸ்க், “ஆம், இது வெற்றிகரமாகச் செயல்​பட்​டு​விட்​டது!” என்று மகிழ்ச்​சி​யுடன் தெரிவித்​தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய டெஸ்லா வாக​னப் பொறி​யியல் பிரிவின் துணைத் தலை​வர் லார்ஸ் மொராவி “பறக்​கும் கார்​கள் என்​பது இனி வெறும் கற்​பனையல்ல, நிஜம்” என்று கூறி​னார். ரோட்​ஸ்​டர் 2 காரின் அசத்​தல் அம்​ச​மாக இந்த கார் வெறும் 1 வினாடி​யில் 0 முதல் 60 mph (மணிக்கு 96 கி.மீ) வேகத்தை எட்டிப்பிடிக்​கும் வல்​லமை கொண்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT