கோப்புப் படம்

 
உலகம்

“நெதன்யாகுவும், ஐசன்கோட்டும் கொள்கை ஒற்றுமை கொண்டவர்கள்” - ட்ரம்ப்

மோகன் கணபதி

வாஷிங்டன்: இஸ்ரேலில் பிரதமர் பதவிக்கு உரிமை கோரியுள்ள காடி ஐசன்கோட்டும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் கொள்கை ஒற்றுமை கொண்டவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் கடந்த 3-ம் தேதி (செவ்​வாய்க்​கிழமை) நாடாளுமன்ற தேர்​தல் நடை​பெற்​றது. மொத்தமுள்ள 120 இடங்களில், பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு தலைமையிலான ஆளும் கூட்​டணி 53 இடங்​களி​லும், எதிர்க்​கட்​சித் தலை​வர் காடி ஐசன்​கோட் தலைமையிலான எதிர்க்​கட்சி கூட்​டணி 48 இடங்களிலும் வெற்றி பெற்றன. இவ்​விரு கூட்​ட​ணிகளுக்கு அடுத்தபடியாக அரபுக் கட்​சிகள் 19 இடங்​களைக் கைப்பற்றியுள்ளன.

பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை எந்த கட்சியும் பெறாததால், அங்கு இழுபறி நிலவி வந்தது. இந்நிலையில், காடி ஐசன்​கோட் தலை​மையி​லான கூட்டணிக்கு, அரபுக் கட்​சிகள் ஆதரவு அளித்துள்ளன. இதன் காரணமாக இக்கூட்டணி 67 உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க காடி ஐசன்​கோட்டுக்கு இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுத்தார். இது தொடர்பாக இஸ்ரேல் அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக், யாஷர் கட்சியின் தலைவர் காடி ஐசன்கோட்டிடம் அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்துள்ளார்.

நெசட் (நாடாளுமன்றம்) குழுக்களுடனும், பல்வேறு முக்கிய நபர்களுடனும் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதை அடுத்து அதிபர் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோரைச் சந்தித்து தனது முடிவை அவர்களிடம் அதிபர் தெரிவித்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் அடுத்த பிரதமராக காடி ஐசன்கோட் பதவியேற்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், காடி ஐசன்கோட்டும் பெஞ்சமின் நெதன்யாகுவும் கொள்கை ஒற்றுமை கொண்டவர்கள் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “கொள்கை அளவில் அவர்கள் ஒரே மாதிரியானவர்களே. என்னைப் பற்றி மிகவும் நல்ல விஷயங்களை காடி ஐசன்கோட் கூறியுள்ளார். தான் ட்ரம்ப்பை நேசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், என்ன நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நிச்சயமாக காடி ஐசன்கோட்டுக்கும் நெதன் யாகுவுக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT