உலகம்

சூடானில் டிரோன் தாக்குதல்: 6 வங்கதேச வீரர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

கெய்ரோ: வட ஆப்​பிரிக்க நாடான சூடானில் அதி​காரத்தை கைப்​பற்​று​வது தொடர்​பாக ராணுவத்​துக்​கும் ஆர்​எஸ்​எப் எனப்​படும் துணை ராணுவப் படைக்​கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு முதல் மோதல் ஏற்​பட்​டுள்​ளது.

இந்த மோதலில் 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் கொல்லப்பட்டுள்​ளனர். அங்கு மனி​தாபி​மான உதவி​களுக்​காக ஐ.நா. அமை​திப்​படை செயல்​பட்டு வரு​கிறது. இதில் பல்​வேறு நாடு​களின் வீரர்​கள் இடம் பெற்​றுள்​ளனர்.

இந்​நிலை​யில் சூடானின் மத்​திய கோர்​டோ​பான் பிராந்​தி​யத்​தில் கடுக்லி நகரில் உள்ள அமை​திப்​படை தளவாடத் தளம் மீது நேற்று டிரோன் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. இதில் வங்​கதேச வீரர்​கள் 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும் 8 வங்​கதேச வீரர்​கள் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செய​லா​ளர் அந்​தோனியோ குத்​தேரஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஐ.​நா. அமை​திப் படை​யினரை இலக்​காக கொண்ட தாக்​குதல்​கள் சர்​வ​தேச சட்​டத்​தின் கீழ் போர்க் குற்​றமாகும். இதற்கு பொறுப்​பானவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​க வேண்​டும்” என்று கூறி​யுள்​ளார்.

இந்த தாக்​குதலை, கிளர்ச்​சிக் குழுக்​களுக்கு பின்​னால் இருந்து செயல்​படும் ஆர்​எஸ்​எப் துணை ராணுவப் படை நடத்தியிருப்பதாக ராணுவம் குற்​றம் சாட்​டி​யுள்​ளது. ஆனால் ஆர்எஸ்​எப் தரப்​பில் எந்​தக் கருத்​தும்​ தெரிவிக்​கப்​பட​வில்​லை.

SCROLL FOR NEXT