ரஷ்ய துணை பிரதமர் அலெக்​சாண்​டர் நோவக்

 
உலகம்

ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கு டீசல் ஏற்றுமதி தொடக்கம்

செய்திப்பிரிவு

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து அமெரிக்​கா​வுக்கு டீசல் ஏற்​றுமதி தொடங்கி உள்​ளது. இதன்​படி ரஷ்யாவில் இருந்து தலா 40,000 மெட்​ரிக் டன் டீசலுடன் 3 எண்​ணெய் கப்​பல்​கள் நியூயார்க் துறைமுகத்​துக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்​டன.

இது​குறித்து ரஷ்ய துணை பிரதமர் அலெக்​சாண்​டர் நோவக் கூறிய​தாவது: ரஷ்யாவில் இருந்து அமெரிக்​கா​வுக்கு டீசல் ஏற்​றுமதி தொடங்கி உள்​ளது. முதல்​கட்​ட​மாக 3 எண்​ணெய் கப்​பல்​களில் டீசல் அனுப்​பப்​பட்டு உள்​ளது. அக்​டோபரில் 3 லட்​சம் மெட்​ரிக் டன் டீசலை கொள்​முதல் செய்ய அமெரிக்கா விருப்​பம் தெரி​வித்​திருக்​கிறது. இம்மாதம்் 5 லட்​சம் டன் டீசலை அமெரிக்​கா​வுக்கு அனுப்ப உள்​ளோம்.

இவ்​வாறு ரஷ்ய துணை பிரதமர் அலெக்​சாண்​டர் நோவக் தெரி​வித்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT