உலகம்

எப்ஸ்டீன் கோப்​பு​களில் 2 இளம்பெண்களுடன் இருக்கும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் புகைப்படம் வெளியாகி சர்ச்சை

செய்திப்பிரிவு

நியூயார்க்: மறைந்த புகழ்​பெற்ற வான் இயற்​பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 2 இளம்​பெண்​களு​டன் இருக்கும் புகைப்​படம் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. சிறுமிகள் மற்​றும் இளம்​பெண்​களை கடத்தி பணக்​காரர்​களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்​தவர் அமெரிக்க தொழில​திபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

இதற்​காக அவர் தனி தீவையே வாங்கி வைத்​திருந்​தார். கடந்த 2019-ல் கைதாகி சில மாதங்​களி​லேயே நியூ​யார்க் சிறை​யில் அவர் தற்​கொலை செய்து கொண்​டார். இதனிடையே, எப்​ஸ்​டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரை​யாடல்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​களை ஆவணப்​படுத்தி வைத்திருந்தார். இவை எப்​ஸ்​டீன் கோப்​பு​கள் என்று அழைக்​கப்​படு​கின்​றன.

          

இந்த எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் இடம்​பெற்​றுள்ள பிரபலங்​களின் சர்ச்​சைக்​குரிய புகைப்​படங்​கள், வீடியோக்​கள் அவ்​வப்​போது வெளி​யாகி வரு​கின்​றன. இந்​நிலை​யில், 2006-ம் ஆண்டு கரீபியன் தீவு​களில் நடை​பெற்ற அறி​வியல் கருத்​தரங்​கின் போது, வான் இயற்​பியல் விஞ்​ஞானி ஸ்டீபன் ஹாக்​கிங், 2 பெண்​களு​டன் இருக்​கும் புகைப்​படம் ஒன்று வெளி​யாகி​யுள்​ளது.

இந்த புகைப்​படம் எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் இருந்து வெளி​யானது என்று தெரிவிக்​கப்​பட்​டது. இது சர்ச்​சையை எழுப்​பியது. இதுகுறித்து விஞ்​ஞானி ஸ்டீபன் ஹாக்​கிங் குடும்​பத்​தார் கூறும்​போது, “அந்த பெண்​கள் இரு​வரும் ஹாக்​கிங்​கின் நீண்ட கால மருத்​து​வப் பணி​யாளர்​கள் ஆவர். உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்ட அவருக்கு 24 மணி நேர​மும் மருத்​துவ உதவி தேவைப்​பட்​ட​தால் அவர்​கள் அவருடன் இருந்​தனர். அப்​போது எடுக்​கப்​பட்ட புகைப்​படம்​தான் அது” என்று தெரி​வித்​துள்​ளனர்.

இந்த எப்​ஸ்​டீன் கோப்​பு​களில் ஹாக்​கிங்​கின் பெயர் பலமுறை குறிப்​பிடப்​பட்​டாலும், அவர் மீதான தவறான குற்​றச்​சாட்​டு​களை எப்​ஸ்​டீன் மறுத்​ததற்​கான ஆதா​ரங்​களும் உள்​ளன. எப்​ஸ்​டீன் வழங்​கிய நிதி​யில் நடத்​தப்​பட்ட அந்த மாநாட்டில், ஹாக்​கிங் பங்​கேற்​றது உண்​மை​தான் என்​றாலும், அவர் எந்த தவறான செயலிலும் ஈடு​பட​வில்லை என்​று ஹாக்​கிங் குடும்​பத்​தார் தரப்பு திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளது.

தசை சிதைவு நோய்க்கு ஆளான ஸ்டீபன் ஹாக்​கிங், வாழ்​நாள் முழு​வதும் சக்கர நாற்​காலி​யிலேயே சுற்றி வந்து பல்​வேறு சிறந்த ஆராய்ச்​சிகளை மேற்​கொண்​டார். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்​ 14-ம்​ தேதி அவர்​ உயி​ரிழந்​தார்​.

SCROLL FOR NEXT