உலகம்

அமைதிக்கான நோபல் பரிசை அதிபர் ட்ரம்புக்கு மச்சாடோ வழங்கியதால் சர்ச்சை

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: வெனிசுலா எதிர்க்​கட்சி தலை​வர் மரியா கொரினா மச்​சாடோ, தனக்கு வழங்​கப்​பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வெனிசுலா நாட்​டின் எதிர்க்​கட்சித் தலைவர் மரியா கொரினா மச்​சாடோவுக்கு 2025-ம் ஆண்டு அமை​திக்​கான நோபல் பரிசு கடந்த அக்​டோபரில் அறிவிக்​கப்​பட்​டது.

வெனிசுலா முன்​னாள் அதிபர் நிக்​கோலஸ் மதுரோ​வின் ஆட்​சிக் காலத்​தில் மச்சாடோ தலைமறை​வாக இருந்​தார். இதன் ​காரணமாக நார்வே தலைநகர் ஓஸ்​லோ​வில் கடந்த டிசம்​பரில் நடை​பெற்ற விழா​வில் மச்சாடோ சார்​பில் அவரது மகள் அனா கொரினா நோபல் பரிசை பெற்​றுக் கொண்​டார்.

உலகம் முழு​வதும் 8 போர்​களை நிறுத்தியதாக கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தனக்கு அமை​திக்​கான நோபல் பரிசு கிடைக்​கும் என்று மிக​வும் எதிர்​பார்த்​திருந்​தார். ஆனால் மச்சாடோவுக்கு நோபல் பரிசு வழங்​கப்​பட்​ட​தால் அவர் கடும் அதிருப்தி அடைந்​தார்.

இதுகுறித்து மச்சாடோ கூறும்​போது, தனக்​கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்​புக்கு அர்ப்​பணிப்​ப​தாக தெரி​வித்​தார். இதனிடையே கடந்த 3-ம் தேதி வெனிசுலா தலைநகர் கராகஸ் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி அதிபர் நிக்​கோலஸ் மதுரோவை கைது செய்​து, நியூ​யார்க்​கில் உள்ள சிறை​யில் அடைத்துள்​ளது.

இதைத் தொடர்ந்து சில நாட்​களுக்கு முன்பு மச்சாடோ கூறும்​போது, “எனக்​கான நோபல் பரிசை அதிபர் ட்ரம்புடன் பகிர்ந்து கொள்ள விரும்​பு​கிறேன்" என்று அறிவித்​தார்.

இந்தச் சூழலில் அமெரிக்க தலைநகர் வாஷிங்ட​னுக்கு நேற்று முன்​தினம் சென்ற மச்சாடோ, அதிபர் ட்ரம்பை சந்​தித்​து தனக்​கான நோபல் பரிசை வழங்​கி​னார்.

இதுகுறித்து அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதிவில், “மரியா கொரினா மச்சாடோவை சந்தித்​ததை மிக​வும் பெரு​மை​யாக கருதுகிறேன். அவர் மிகச் சிறந்த பெண். எனது பணி​களை பாராட்டி நோபல் பரிசை அவர் எனக்கு வழங்​கி​னார். மரியா கொரினா மச்சாடோவுக்கு நன்​றி" என்று தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து நோபல் கமிட்டி சமூக வலை​தளத்​தில் வெளியிட்ட பதிவில், “ஒரு​வருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்​பட்​டால், அதை யாராலும் மாற்ற முடி​யாது. நோபல் பரிசை யாருட​னும் பகிர்ந்து கொள்ள முடி​யாது. யாருக்​கும் தான​மாகவோ, பரி​சாகவோ வழங்க முடி​யாது. ஒரு​வேளை பதக்​கம் கைமாறலாம். நாங்​கள் அறி​வித்த நபரே நோபல்​ பரிசின்​ உண்​மை​யான உரிமை​தா​ரர்​" என்று தெரிவிக்கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT