சீன மனித ரோபோக்கள் சவுதியின் ‘அர்தா’ வாள் நடனம் ஆடி விருந்தினர்களை வியக்க வைத்தன.

 
உலகம்

ரியாத்தில் நடந்த விழாவில் சவுதி பாரம்பரிய நடனம் ஆடிய சீன ரோபோக்கள்

செய்திப்பிரிவு

ரியாத்: சீன தூதரகம் சார்​பில் ரியாத்​தில் நடந்த தேசிய தின விழா​வில், சீன மனித ரோபோக்​கள் சவு​தி​யின் ‘அர்​தா’ வாள் நடனம் ஆடி விருந்​தினர்​களை வியக்க வைத்​தன. இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளது.

சீன மக்​கள் குடியரசு 1949 அக்​டோபர் 1-ம் தேதி நிறு​வப்​பட்​டதன் 77-வது ஆண்டை நினை​வு​கூரும் வகை​யில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் ரியாத் மண்டல மேயர் இளவரசர் பைசல் பின் அப்​துல்​அசீஸ் பின் அய்​யாப் அல்​-​முக்​ரின், சவு​திக்​கான சீன தூதர் சாங் ஹுவா உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இந்​நிகழ்ச்​சி​யில், சவுதி ஆண்​கள் அணி​யும் பாரம்​பரிய ‘தோப்’ உடையை​யும் ‘குத்​ரா’ தலைப்​பாகை​யை​யும் அணிந்த மனித ரோபோக்​கள் மேடைக்கு வந்​தன. கைகளில் பாரம்​பரிய வாள்​களை ஏந்​தி​யபடி, மரபு சார்ந்த முரசு இசைக்கு ஏற்ப ஒருங்​கிணைந்த வரிசை​யில் நகர்ந்​தும், திரும்​பி​யும், குனிந்து வணங்​கி​யும் அர்தா நடனத்​தின் பல அசைவு​களை அவை வெளிப்​படுத்​தின. நடனத்​தின்​போது சமநிலை​யைப் பராமரித்த வித​மும், அசைவு​களில் இருந்த நேர்த்​தி​யும் அரங்​கில் இருந்​தவர்​களின் கவனத்தை ஈர்த்​தது.

இந்​நிகழ்ச்​சிக்​குப் பிறகு, தூதர் சாங் ஹுவா இந்த நடனத்​தின் வீடியோவை ‘எக்​ஸ்’ தளத்​தில் பகிர்ந்​தார். “சீன மக்​கள் குடியரசு நிறு​வப்​பட்​டதன் 77-வது ஆண்டை முன்​னிட்டு எங்​கள் தூதரகம் வரவேற்பு நிகழ்ச்​சியை நடத்​தி​யது.

எங்​கள் அழைப்பை ஏற்று வருகை தந்த நண்​பர்​களுக்கு நன்​றி. சீனா​வில் தயாரிக்​கப்​பட்ட ரோபோக்​கள் அற்​புத​மாக நிகழ்ச்​சியை வழங்​கி, பங்​கேற்​றவர்​களிடம் ஆழ்ந்த தாக்​கத்தை ஏற்​படுத்​தின” என்று அவர் குறிப்​பிட்​டார்.

இந்த வீடியோ வெளி​யானதும், இது சீனா​வின் தொழில்​நுட்ப வளர்ச்​சிக்கு சான்று என்று பலரும் எக்ஸ் தளத்​தில் பாராட்​டினர்.

SCROLL FOR NEXT